செய்திகள் :

ஈரான் - இஸ்ரேல்: "அமெரிக்காவை நாங்கள் போருக்குள் இழுக்கவில்லை" - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

post image

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுப் படை போர் தொடங்கி 20 நாள்கள் நெருங்கிவிட்டது. இன்றளவும் இருநாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அது வதந்தி என இஸ்ரேல் மறுத்தது.

இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஊடகங்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, ``ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அணுசக்தித் திறன் பெரியளவில் சிதைத்திருக்கிறோம். ஈரானால் இனி யுரேனியத்தைச் செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கவோ முடியாது. ஈரான் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது.

நெதன்யாகு - ட்ரம்ப்
நெதன்யாகு - ட்ரம்ப்

போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படும்.

அமெரிக்காவை இந்தப் போருக்குள் இஸ்ரேல் கட்டாயப்படுத்தி இழுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிபர் ட்ரம்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிக் கொடுக்க முடியுமா? அவர் எப்போதும் அமெரிக்காவின் நலனுக்காகவே முடிவெடுப்பார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை மற்றும் ராணுவங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை எட்டி வருகின்றன. முழு மத்திய கிழக்கையும், ஏன் உலகத்தையே நாங்கள் பாதுகாத்து வருவதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஈரானின் முக்கிய எரிசக்தி வளமான South Pars எரிவாயு வயல் மீதான தாக்குதலில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டது. அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று, அந்த எரிவாயு வயல்கள் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். ஈரான் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தில் இருக்கிறது.

இதுவரை வான்வழித் தாக்குதலாக மட்டுமே நடந்து வரும் இந்தப் போர், அடுத்தகட்டமாகத் தரைவழித் தாக்குதலாக மாறக்கூடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஈரானின் தற்போதைய தலைமைக்குள் கடும் குழப்பமும் பதற்றமும் நிலவுகிறது.

இப்போது ஈரானை யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஈரானிய மக்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் நாட்டின் எழுச்சிக்கு வழிவகுக்க வேண்டும். அந்த நாட்டின் எதிர்காலம் மக்கள் கையிலேயே இருக்கிறது" என்றார்.

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்... மேலும் பார்க்க

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! - செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். ’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற ... மேலும் பார்க்க

எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

தி.மு.க-வுக்கு வரும் அ.தி.மு.க-வினர்:ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் முக்கிய தலைவர்கள், அதிருப்தியில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது, சேர்வது வழக்கமான ஒன்று. ஆனால், யாரும் யோசித்துக் கூட ... மேலும் பார்க்க

`தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக

`என்.ஆர்.காங்கிரஸ் முக்கியம்தான்… ஆனால்.!’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத... மேலும் பார்க்க

தேர்தல் விதி மீறி பரிசுப் பொருள்; வேலூர் திமுக மேயரின் கார் பறிமுதல் - ஓட்டுநர் மீது வழக்கு பதிவு

வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் பின்புறமாக இருக்கும், மாநகராட்சி வணிக வளாகத்துக்குள் நேற்று இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, மறைமுகமாக விளை... மேலும் பார்க்க