செய்திகள் :

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

post image

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அனைத்து நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் உட்பட எந்த நாடும் அமெரிக்காவிற்கு இவ்விவகாரத்தில் நேரடியாக ஆதரவு கொடுக்க தயக்கம் காட்டி வந்தன. சில நாடுகள் நேரடியாகவே தங்களால் ஆதரவு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டன. தற்போது ஈரான் கத்தார் போன்ற வளளைகுடா நாடுகளில் எரிவாயு தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு பிரிட்டன், ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கத்தார் எல்பிஜி தொழிற்சாலை

ஆனால் ஈரானில் இஸ்ரேல் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தின. இது தொடர்பாக அந்நாடுகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,''ஈரானின் அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகளை வைத்தல், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதற்கான பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என்ற தலைவர்களின் கூட்டு அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ``சர்வதேச கப்பல் போக்குவரத்தில் இத்தகைய குறுக்கீடு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலிகளின் சீர்குலைவு ஆகியவை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடல் வழி சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஈரானின் நடவடிக்கைகளின் விளைவுகளால் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்''என்று குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் முன்னணி ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் சேர்ந்துசெயல்பட ஒப்புக்கொண்டன.

இதற்கிடையே ஈரானிய தாக்குதல் காரணமாக கத்தாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறனில் சுமார் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரியும், எரிசக்தி விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்தார். அதோடு ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பழுதை சரி செய்ய 5 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்

தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

நினைவுச் சுவடுகள் 10: ஜனநாயக அரசியலின் நினைவுச் சின்னம் - சைக்கிள் பேரணி!

சைக்கிள் பேரணிநினைவுச் சுவடுகள் 10தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் என்றால், பெரிய பொதுக்கூட்டங்கள், திரைப்படக் காட்சிகளை நினைவூட்டும் ஊர்வலங்கள், பரபரப்பான மேடைப் பேச்சுகள் என பல அம்சங்கள் நினைவுக்கு வரும... மேலும் பார்க்க

திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்! - செய்து காட்டி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். ’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற ... மேலும் பார்க்க

எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

தி.மு.க-வுக்கு வரும் அ.தி.மு.க-வினர்:ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் முக்கிய தலைவர்கள், அதிருப்தியில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது, சேர்வது வழக்கமான ஒன்று. ஆனால், யாரும் யோசித்துக் கூட ... மேலும் பார்க்க

`தவெக விஜய்யுடன் பேசுவோம்!’ - விலக நினைக்கும் ரங்கசாமி; வளைக்கத் துடிக்கும் பாஜக

`என்.ஆர்.காங்கிரஸ் முக்கியம்தான்… ஆனால்.!’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத... மேலும் பார்க்க