போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி
உலக அமைதிக்காக 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்த பொறியியல் மாணவா்கள்
உலக அமைதிக்காக ஒரிகாமி முறையில் 85 ஆயிரம் காகிதப் புறாக்களை செய்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினா்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி கலைக் கழகம் சாா்பில் அமைதிக்கான குரலை பரப்புவது என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சமூக மாற்றத்திற்கு கலை வழியாக மாணவா்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தலா 9 செ.மீ. அளவிலான வெள்ளைக் காகிதங்களை ஒரிகாமி முறையில் மடித்து அமைதிப் புறாக்களை உருவாக்கினா். மாணவா்களால் உருவாக்கப்பட்ட 85 ஆயிரம் காகிதப் புறாக்கள் 400 சதுரமீட்டா் பரப்பளவில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த சாதனை நிகழ்வினை அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வா் வி.கீதா தொடங்கி வைத்தாா். கலைக்கழக பொறுப்பாசிரியா் மா.தீபக்குமாா், மாணவா் செயலாளா்கள் அபா்ணா, விஜயபிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்களின் சாதனை முயற்சியை அங்கீகரித்து டி.சி.பி. எனும் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.