Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்க...
Parasakthi: "டான்ஸுக்கு பாராட்டி இருக்காங்க; கேரக்டருக்கு பாராட்டு கிடைப்பது முதல் முறை" - ஸ்ரீலீலா
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திரைப்படம் இதுதான்.

அதைத் தாண்டி அதர்வா, சேத்தன், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர்களைத் தாண்டி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கும் இத்திரைப்படம் ஒரு மைல்கல்.
ஆம், இது அவர் இசையமைக்கும் 100-வது திரைப்படம். இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, "முதல் முறை என் படத்தில் நடிக்கிறதுனால சில பிரச்னைகள் இருந்திருக்கலாம். சிவா கூட முதல்ல சில நாட்கள் எனக்கு சிங்க் மிஸ் ஆகுச்சு.
எனக்கு பின்னாடி போய் பேசுறது பிடிக்காது. பிறகு நானும் சிவாவும் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினோம்.
காட்சிகள் முடிச்சிட்டு மானிட்டர் பாருங்க சிவானு சொல்வேன். ஆனா, அவர் என்னுடைய முகத்தைத்தான் பார்த்துட்டிருப்பார்." என்றார்.

நடிகை ஸ்ரீலீலா பேசுகையில், "இதுவரைக்கும் என்னுடைய டான்ஸுக்கு பராட்டுகள் வந்திருக்கு. ஒரு கேரக்டருக்கு முழுமையான பாராட்டுகள் எனக்கு கிடைக்கிறது இதுவே முதன்முறை.
தமிழ்ல இப்படம் எனக்கு பெர்பெக்டான அறிமுகமாக அமைஞ்சிருக்கு. இந்தப் படத்தின் மூலமா நல்ல பவுண்டேஷன் கிடைச்சிருக்கு.
இதன் மூலமா தமிழ்ல என்னுடைய கரியரை வளர்த்துப்பேன்." எனக் கூறினார்.
படங்கள் : ராகுல். செ













