செய்திகள் :

உ.பி: கடித்தப் பாம்பை சட்டையில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபர்; பதறிய மருத்துவர்கள்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (39). ஆட்டோ டிரைவரான தீபக், தனது ஆட்டோவிற்குத் தேவையான பேட்டரியை வாங்குவதற்காக விருந்தாவன் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே கடித்தப் பாம்பைப் பிடித்து, குளிருக்குத்தான் அணிந்திருந்த ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் உடனே சிகிச்சை கொடுக்கவில்லை. அவரிடம் இருந்த பாம்பைப் பார்த்து டாக்டர்கள் சிகிச்சை கொடுக்க பயந்தனர். டாக்டர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

பொதுமக்களும், அங்கு இருந்தவர்களும் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதோடு அங்கு இருந்தவர்கள் பாம்பை விட்டுவிடும்படி கூறினர். ஆனால் அவர் பாம்பை விட மறுத்துவிட்டார்.

சித்திரிப்புப் படம்

போலீஸார் விரைந்து வந்து தீபக்கை சமாதானப்படுத்தி அவரிடமிருந்த பாம்பை ஒரு பாக்ஸில் வாங்கினர். அதன் பிறகுதான் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். தற்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் நீரஜ் கூறுகையில், ''நோயாளியிடம், பாம்பால் மற்ற நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி பாம்பை வெளியில் விடும்படி கேட்டுக்கொண்டோம்'' என்றார். ஆனால் இது குறித்து தீபக் கூறுகையில், ''டாக்டர்கள் எனக்கு சிகிச்சை கொடுக்காமல் அரை மணி நேரம் காக்க வைத்தனர். அவர்கள் என்னை சாலையில் அமர வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போதிய வசதி இல்லை'' என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ''கடித்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானதாக இருக்கவேண்டும் என்று சந்தேகப்படுகிறோம்'' என்று தெரிவித்தனர். பாம்பை பெட்டியில் பிடித்த பிறகுதான் மருத்துவமனையில் இருந்த மற்றவர்கள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

`மறப்பேன்... மன்னிக்க மாட்டேன்!' - விவாகரத்து குறித்து மேரிகோம் முன்னாள் கணவர் பதில்!

பிரபல மல்யுத்த வீராங்கனையான மேரிகோம் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது கணவர் ஒன்லரை விவாகரத்து செய்துவிட்டதாக, குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது உழைப்பில் வாங்கிய நிலத்தை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் ப... மேலும் பார்க்க

விஐடி-யில் பொங்கல் விழா: `உலகத் தமிழர்கள் கொண்டாடும் ஒரே விழா' - வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.மாணக்கர் நல இயக்கம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் வி... மேலும் பார்க்க

``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம்" - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000... மேலும் பார்க்க

`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வ... மேலும் பார்க்க