செய்திகள் :

Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்கள்!

post image

நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், அரங்குகள் நிறையும் வாசகர் கூட்டம் என, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சி, பரபரத்துக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக இந்தக் கண்காட்சி, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மேடையாக அமைந்துள்ளது.

காலச்சுவடு அரங்கில் புத்தகங்களோடு காணப்பட்ட ஆய்வாளரும், எழுத்தாளருமான ஆ.இரா.வெங்கடாச்சலபதியிடம், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி குறித்துக் கேட்டோம்.

நம்மிடம் பேசியவர்,

“புத்தகக் கண்காட்சி என்பது புத்தகங்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கானது. அங்கே புத்தக வாசிப்பு குறித்தே பேச வேண்டும். வாசகர்–எழுத்தாளர் உரையாடல்களே நடக்க வேண்டும்.

ஆனால் அதைத் தவிர, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கே நடத்தப்படுகின்றன. அவை வாசகர்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன. அந்த சத்தமும், இரைச்சலும் வாசிப்பைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

சில புத்தகங்களை வெளியிடுவதற்கே சிரமம் ஏற்படுகிறது. அரசியல் வேண்டாம் என்று கூறுகின்றனர். அரசு அனுமதித்த எந்த புத்தகத்தையும் இங்கு வெளியிடவும், விற்கவும் உரிமை இருக்க வேண்டும். அதற்கு இடைஞ்சல் தரக் கூடாது. புத்தகங்களுக்கான ஒரு ‘free space’ ஆக இந்த இடம் இருக்க வேண்டும்.

நான் டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றுள்ளேன். அங்கெல்லாம் இப்படி இரைச்சல் இல்லை. இதை பபாசி நிர்வாகம் கவனிக்க வேண்டும். மற்றபடி, கண்காட்சி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது” என்றார்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களாக அவர் குறிப்பிட்டவை:

காதலின் குறுவாள் – மீரா கவிதைகள் – தமிழில்: செங்கதிர், நூல் வனம் பதிப்பகம்

ருசிபேதம் – ஷான் நவாஸ், யாவரும் பதிப்பகம்

பாரதியின் தராசு – ய. மணிகண்டன், காலச்சுவடு பதிப்பகம்

சோழ அரசும் சமூகமும் – எ. சுப்பராயலு, காலச்சுவடு பதிப்பகம்

கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் – கைவல்ய சுவாமியார், விடியல் பதிப்பகம்

(இது ஆராய்ச்சியாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என அவர் குறிப்பிட்டார்)

`மொழி எனும் பண்பாட்டு சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்..!' - எழுத்தாளர் மகுடேஸ்வரன்

சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்... வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்த... மேலும் பார்க்க

`பெண்கள் துணிந்து பேசினால்தான், தீர்வு கிடைக்கும்!' - இளம் எழுத்தாளர் வெண்பா

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories' பதிப்பக அரங்க... மேலும் பார்க்க

இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால், இளைஞர்களின் கூட்டமும் அலைமோதியது. சரி, இந்த புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் சாய்ஸ் என்னவாக இ... மேலும் பார்க்க

`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின் பரிந்துரைகள்!

சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், வார இறுதிநாள் என்பதால் வாசகர்கள் கூட்டம் களைகட்டியது.அங்கு வாசகர்களால் சூழப்பட்டிருந்த, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தனது எழுத்துகளில் தொடர்... மேலும் பார்க்க

`வாசிப்புப் பழக்கம் தொடர்வது மகிழ்ச்சி' - பவா செல்லதுரை பரிந்துரைக்கும் 3 நூல்கள்!

கோலாகலமாக நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தக கண்காட்சியில், வார இறுதியில் குவிந்த வாசக கூட்டத்திற்கு மத்தியில், தனசீலி திவ்யநாதன் எழுதிய ஏவாளும் சாராளும் நூல் வெளியீட்டு நிகழ்வு, Her Stories அரங்கில... மேலும் பார்க்க

சென்னை புத்தக கண்காட்சியில் ஒரே இடத்தில் ஆதார், தபால், மை ஸ்டாம்ப் சேவைகள்! - சூப்பர் வரவேற்பு!

இன்று வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து பலதரப்பட்ட பொது மக்கள் சேவைகள் வரை, ஆதார் அடையாள எண் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.இந்நிலையில், ஆதார் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்யவும் பலருக்... மேலும் பார்க்க