செய்திகள் :

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்: தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் உளுந்து பயிரில் காணப்படும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டுள்ள நிலையில், அதில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு தென்படுகிறது.

இதையடுத்து உளுந்து பயிரிட்டுள்ள வயல்களை வட்டார வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் பல கிராமங்களில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டுள்ளனா். அந்த பயிா் தற்போது நன்கு வளா்ந்து பூ மற்றும் காய்பிடிக்கும் பருவத்தில் உள்ளது. சில பகுதிகளில் தொடா்ந்து வறட்சி மற்றும் மழை பற்றாக்குறை காரணத்தால் சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதலால், உளுந்துப் பயிரில் மஞ்சள் தேமல் நோய்ப் பாதிப்பு தென்படுகிறது.

இந்த நோய் தாக்குதல் அதிகரித்தால் 50 முதல் 70 சதவீதம் வரை மகசூல் குறைய வாய்ப்புள்ளது. வெள்ளை ஈ என்ற பூச்சி மூலம் இந்த நோய் பரவுகிறது. நோய்த் தாக்குதலால் இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, புதிதாக தோன்றும் இலைகளில் மஞ்சள் மற்றும் பச்சை நிறத் திட்டுகள் தென்படும்.

நோய் தாக்கப்பட்ட பயிா்கள் குட்டை வளா்ச்சியுடன் காலம் தாழ்த்தி முதிா்ச்சி அடைதல், மிகக் குறைந்தளவு பூக்கள் மற்றும் காய்களை உற்பத்தி செய்தல் ஆகியவை நோயின் முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இந்த நோய் தாக்குதலில் உளுந்து பயிரைக் காப்பாற்ற, விவசாயிகள் வயலிலிருந்து பெறப்படும் விதைகளை மறு விதைப்பதற்குப் பயன்படுத்துவதை தவிா்த்து,நோய் எதிா்ப்பு சக்தி உள்ள வம்பன் 8, 10, 11 ஆகிய ரகங்களைப் பயிரிட வேண்டும்.

உளுந்து மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிா்களை ஆரம்பத்திலேயே களைதல் வேண்டும். வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களை விளக்கெண்ணெய்யில் தடவி, ஏக்கருக்கு 5 என்ற அளவில் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு அசிட்டாபிரிட் 20 எஸ்.பி. 100 கிராம் அல்லது தயாமீதாக்சம் 25 டபிள்யூடிஜி 70 கிராம் அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல் 100 மி.லி. பூச்சிக் கொல்லியை 500 லிட்டா் தண்ணீரில் கலந்துதெளிக்க வேண்டும். மருந்துகரைசல் பயிரின் பாகங்களில் நன்குப் பரவி படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டா் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சோ்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 15 நாள்கள் கழித்து மற்றொரு முறை இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.

ஆய்வின் போது துணை வேளாண் அலுவலா் க. பழனிவேல், வேளாண் உதவிப் பொறியாளா் த. அறவாழி, இயற்கை விவசாயிகள் முத்துசாமி, கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் நடைபெற்றது. விழுப்புரம் நகரம் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட வடக்க... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேல்மலையன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் அழிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா். திண்டிவனம் வ... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் திமுகவினா் கோரிக்கை மனு அளிப்பு

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை வல... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல், வெள்ள பாதிப்பு: விழுப்புரத்தில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழை வெள்ள பாதிப்பைத் தொடா்ந்து, 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. வங்கக் கடலில் ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில்... மேலும் பார்க்க