செய்திகள் :

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்

post image

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூலம் நிர்வகிக்கப்படும் பொதுக் கழிப்பறைகளில் ஆண்களிடம் 5 ரூபாயும் பெண்களிடம் 10 ரூபாயும் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குன்னூர் பேருந்து நிலையக் கழிவறை

குன்னூரைச்‌ சேர்ந்த பெண்கள் சிலர் கூறுகையில், "குன்னூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்த பெண்களிடம் 10 ரூபாய் வாங்குகிறார்கள். சிறுநீர் கழிக்க ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை அந்தக் கழிவறையப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கழிவறைக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 40 ரூபாய் வரை தேவைப்படுகிறது. எப்படிச் சமாளிக்க முடியும்? இவ்வளவு பணம் வாங்கியும் முறையாகப் பராமரிப்பதில்லை. நோய்த்தொற்று ஏற்படும் நிலையில்தான் இருக்கிறது. பெண்களாகிய எங்களுக்கு பஸ்ஃ ஃபிரீ தான். ஆனால், பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" என்றனர்.

நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தைச் சேர்ந்த மனோகரன் பேசுகையில், "நகராட்சி பேருந்து நிலையங்களில் இலவச சிறுநீர் கழிப்பறை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இலவச கழிப்பறை இல்லாத ஒரே பேருந்து நிலையமாக குன்னூர் பேருந்து நிலையம் இருக்கிறது. சிறுநீர் கழிக்க 2 ரூபாய், மலம் கழிக்க 5 ரூபாய் வாங்க வேண்டும். ஆனால், பெண்களிடம் 10 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் பலரும் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் ஊட்டியில் போக்குவரத்துக் கழகம் மூலம் நிர்வகிக்கப்படும் பொதுக் கழிப்பறையிலும் பெண்களிடம் 10 ரூபாய் வாங்குகிறார்கள். வேறு வழியில்லாமல் கேட்கிற தொகையை பெண்கள் கொடுத்து விட்டுப் போகிறார்கள்" என்றார்.

குன்னூர்

இது குறித்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பு, "ஒப்பந்ததாரர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் அனைத்து பொதுக் கழிப்பறையிலும் கட்டண தொகை குறித்து அறிவிப்பு பதாகை வைக்க வேண்டும். 10 ரூபாய் வசூலிப்பது சட்டப்படி தவறு. அத்துமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உத்தரவிட்டுள்ளது.

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்... மேலும் பார்க்க

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் வி... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி - வேலூரில் இவ்வளவு புகார்களா?

வேலூர் மாவட்டத்தில், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு ``அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது... மேலும் பார்க்க

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மி... மேலும் பார்க்க

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ - அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்த முருகுமாறன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தவர்... மேலும் பார்க்க