செய்திகள் :

'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது குறித்து கலங்கிய சூர்யகுமார்

post image

நேற்று ( மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

mi vs rcb
mi vs rcb

பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால், 2026 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த சீசனில் மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை மும்பை அணி சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் மும்பை அணியின் இந்தத் தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "இப்படி ஒரு நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு கசப்பான உண்மை.

நாங்கள் எப்போதும் வெற்றியையே பார்த்த அணி, இப்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்தது தாங்க முடியாத வலியாக இருக்கிறது. நாங்கள் இந்த விளையாட்டை நேசிப்பதாலேயே விளையாடுகிறோம்.

mi vs rcb match
mi vs rcb match

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களின் சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க முயற்சி செய்தோம். இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வது சற்று கடினம் தான்.

ஆனாலும், இந்த சீசனில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அடுத்த ஆண்டு இன்னும் வலிமையாகத் திரும்பி வருவோம்" என்று கலங்கியபடி பேசியிருக்கிறார்.

Cricket: கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் மரணம்; விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல்!

இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான கா... மேலும் பார்க்க

SRH vs PBKS: "அதில் கோட்டை விட்டுவிட்டோம்; தோல்விக்கு அதுவே காரணம்!" - ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று (மே 6) நடைபெற்ற பஞ்சாப் vs ஹைதராபாத் போட்டியில், 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது ஹைதராபாத் அணி. SRH vs... மேலும் பார்க்க

CSK : தோனிக்கு என்னதான் பிரச்னை? அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை? - தெளிவாக விளக்கும் மைக் ஹஸ்ஸி!

சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் மைக்... மேலும் பார்க்க

'என்னா பங்கு இப்படி ஆயிடுச்சு?' - சன்ரைசர்ஸிடமும் அடிவாங்கிய மும்பை!

புள்ளிப் பட்டியலில் பெரியளவில் மாற்றமில்லை, இருப்பினும் இந்த ஒரு போட்டியின் முடிவு சன்ரைசர்ஸை பிளே ஆஃப்புக்கு அருகாமையிலும் மும்பை இந்தியன்ஸை அதைவிட்டு தள்ளியும் வைத்துள்ளது.!இரு வெற்றிகளை மட்டுமே நடப... மேலும் பார்க்க

IPL: டிரெஸ்ஸிங் ரூமில் தடை செய்யப்பட்ட E-Cigarette பயன்படுத்திய ரியான் பராக்? தீயாய் பரவும் வீடியோ

ஐபிஎல் தொடரில் நேற்று(ஏப்ரல்28) பஞ்சாப் vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமி... மேலும் பார்க்க