செய்திகள் :

எடப்பாடி: 'தாய் கழகத்தில் தவெக வேட்பாளர்!' - பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அருண் குமார்

post image

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது.

அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட்பாளராகவும் த.வெ.க தரப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என அருண் குமார் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவரின் வேட்புமனுக்களையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

எடப்பாடி தொகுதியில் த.வெ.க போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தொலைகாட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு அந்தத் தொகுதியில் த.வெ.க ஆதரவு அளித்தது. அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார்.

எடப்பாடி பழனிசாமியுடன் அருண் குமார்
எடப்பாடி பழனிசாமியுடன் அருண் குமார்

"முன்னாள் அ.தி.மு‌.க நிர்வாகியான அருண் குமார், அ.தி.மு.க- விடம் விலைபோன காரணத்தால்தான் வேண்டுமென்றே வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை. சூழ்ச்சியால்தான் எடப்பாடி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டோம்" என அக்கட்சியினர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில், தாய் கழகமான அ.தி.மு.க- வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மீண்டும் இணைந்திருக்கிறார் அருண் குமார்.

இந்தப் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட த‌.வெ.க திர்வாகிகள், "கொளத்தூரைப்‌ போலவே எடப்பாடியிலும் ஆட்டம் காண்பிக்க வேலை செய்து வந்தோம். ஆனால், தேர்தல் நாடகத்தில் எடப்பாடி பழனிசாமியால் த.வெ.க- வில் இணைந்து சீட் வாங்கி சூழ்ச்சியை நிறைவேற்றி விட்டு மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து கொண்டார் அருண் குமார்" என்றனர்.

3,508 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம்; திருவண்ணாமலை மணிமாறனுக்கு `சிறந்த சமூகப் பணியாளர்’ விருது

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு: "மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம்" - ராஜ்மோகன் கண்டனம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

விஜய் குறித்து நயினார் சர்ச்சைப் பேச்சு; "தாயை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது" - சீறும் அண்ணாமலை

கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.நயினார் நாகேந்திரன்சுதந்திர தின விழாவில் பேசிய நய... மேலும் பார்க்க

"பெண்களுக்கு எதிரான அவதூறுதான் பாஜக அரசியலின் அடிப்படை" - நயினார் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

“அப்பா எங்கனு அம்மாகிட்ட கேட்டா தானே தெரியும்” - நயினார் நாகேந்திரன் பேச்சால் மீண்டும் சர்ச்சை

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக... மேலும் பார்க்க

மா.செ-க்களுக்கு செக்; செயல் தலைவராகும் உதயநிதி? - செயற்குழுவில் அதிரடிக்கு தயாராகும் திமுக

துரைமுருகன் மாற்றா ?இளைஞர்களுக்கு வாய்ப்பு… 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிய... மேலும் பார்க்க