செய்திகள் :

"எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் ஆத்மா தண்டனை கொடுக்கிறது" – அமைச்சர் செங்கோட்டையன்

post image

கோவை விமான நிலையத்தில் அமைச்சர்  செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான ஆட்சியை, மக்கள் வியக்கத்தக்க ஆட்சியை இளைஞர்கள், மகளிர், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என அனைவரும்  மாற்றம் வேண்டும் என்ன விரும்பினர்.

இதனால்  சிறந்த ஆட்சியை இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நீக்கி, பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த வரலாறை இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கி காட்டி இருப்பவர் முதல்வர் விஜய்

தொலைநோக்கு சிந்தனையுடன், தமிழகம் இந்தியாவிற்கு ஒரு சிறந்த  திருப்புமுனையை உருவாக்கும் மாநிலமாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கும் மாநிலமாக இருக்கும்.

அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் திட்டங்களாக இருக்கின்றன. 200 யூனிட் மின்சாரம், பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டம், சிறிய குழந்தைகள் போதையில் அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகப் பாதுகாக்கும் திட்டம், ஆலயங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் திட்டங்களாக இருக்கின்றன.

நல்லாட்சியைத் தருவதற்கு சிறந்த ஆட்சியைக் கொடுப்பதற்கு, இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்ற வரலாற்றைப் படைப்பதற்கு விஜய் ஒருவரால் தான் முடியும். வேறு எவராலும் முடியாது” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்து இருப்பது குறித்த கேள்விக்கு, “பொதுவாக மக்களை நேசிக்கின்றவர்கள், தலைவரை நேசிக்கின்றவர்கள், தலைவர் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குத்தான் இந்தச் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரும்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் தேவையில்லை, என் படம் போதும் எனப் பாராட்டு விழா வைத்தவர் (எடப்பாடி பழனிச்சாமி). இன்று அவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. இன்றைக்கும் ஜெயலலிதா படம் என் பாக்கெட்டில் இருக்கிறது. என் படம் மட்டும் போதும் என நினைத்தவரின் கனவு தூள் தூள்தூளாக்கப்பட்டுள்ளது.

அவருடைய ஆத்மா இன்று தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடு பார்த்துகொண்டு இருக்கிறது” எனப் பதிலளித்தார்.

"தொடர் அவதூறு... எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்" - எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்... மேலும் பார்க்க

சனாதனம்: "இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால்தான்..." - முதல்வர் விஜய்க்கு நயினார் கேள்வி

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' சனாதனம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சமூக நீதிக்கு நல்... மேலும் பார்க்க

’செங்கோட்டையன் வேண்டுகோளை ஏற்று.!’ - தவெகவுக்கு தாவும் கோவை அதிமுக நிர்வாகிகள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து இருப்பதோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து... மேலும் பார்க்க

"திமுகவைக் குறைத்து மதிப்பிட்டால், அது அரசியல் புரிதல் இல்லை என்றே அர்த்தம்" - கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள... மேலும் பார்க்க

ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு: அமெரிக்காவிற்கு 'ஈரான்' பிரச்னை; சீனாவிற்கு 'தைவான்' பிரச்னை

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு ட்ரம்ப், சீனா சென்றிருந்தார். அதன் பிறகு, இப்போது தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சீனா சென்ற... மேலும் பார்க்க

'அதிமுகவுக்கு மினிமம் 5 அமைச்சர்கள்!' - டிமாண்ட் ஏற்றும் வேலுமணி டீம்; இறுதிக்கட்ட ஆலோசனையில் விஜய்?

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையி... மேலும் பார்க்க