செய்திகள் :

Ooty Rose Show: ஹார்ன் பில் முதல் ஹம்மிங் பறவை வரை; 2 லட்சம் ரோஜாக்களால் களைகட்டும் ஊட்டி!

post image

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

நறுமணப் பொருட்கள் கண்காட்சியில் தொடங்கி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பிரமாண்ட மலர் கண்காட்சி வரை மே மாதம் முழுவதும் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படும். ஆனால், நடப்பு ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாக கோடை விழா தள்ளிப்போனது.

ஊட்டி ரோஜா கண்காட்சி
ஊட்டி ரோஜா கண்காட்சி

சுற்றுலாப் பயணிகளில் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டுரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் காட்சி இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெற உள்ள இந்த ரோஜா கண்காட்சியில் பயணிகளைக் கவரும் வகையில் சுமார் 2 லட்சம் ரோஜா மலர்களில் பல்வேறு மலர் அலங்காரங்களை வடிவமைத்து தோட்டக்கலைத் துறையினர் அசத்தியுள்ளனர்.

பறவைகள் பாதுகாப்பை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி பெருமளவில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது .

ஊட்டி ரோஜா கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், "இந்த ஆண்டு ரோஜா கண்காட்சியின்‌ சிறப்பம்சமாக 80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பிரமாண்ட அன்னப்பறவை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி ரோஜா கண்காட்சி
ஊட்டி ரோஜா கண்காட்சி

மேலும் 20 ஆயிரம் ரோஜாக்களில் ஹார்ன் பில், 20 ஆயிரம் ரோஜாக்களில் பருந்து , ஹம்மிங் பறவை, தூக்கனாங்குருவி, புல் புல் பறவை உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் மலர் அலங்காரப் பணிகளை மேற்க் கொண்டுள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் இந்த ரோஜா கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்" என்றனர்.

`ஆச்சி’ மனோரமா: அண்ணா முதல் விஜய் வரை - 6 முதல்வர்களுடன் நடித்த ஒரே சாதனை நாயகி!

இந்தியத் திரையுலகில் ஈடு இணையற்ற குணச்சித்திர, நகைச்சுவை நடிகையாக விளங்கியவர் ‘ஆச்சி’ மனோரமா. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவ... மேலும் பார்க்க

Anime Awards 2026 மேடையில் 'நேஷனல் க்ரஷ்'; உலகமே வியக்கும் ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த அதிரடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மே 23, 2026 அன்று 10-வது க்ரஞ்சிரோல் குளோபல் அனிமே விருதுகள் (Crunchyroll Anime Awards 2026) விழா நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனிமே (ஜப்பானிய அனிமேஷன்) ரசிகர்களால் கொ... மேலும் பார்க்க

"ஐஸ்வர்யா ராய்தான் என் உயிர்த்தோழி" - விவாகரத்து வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி!

திரையுலக நட்சத்திரத் தம்பதிகளின் வாழ்க்கை எப்போதும் பொதுமக்களின் ஆர்வத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் - பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரின் திருமண வாழ்க்கை கட... மேலும் பார்க்க