செய்திகள் :

'அதிமுகவுக்கு மினிமம் 5 அமைச்சர்கள்!' - டிமாண்ட் ஏற்றும் வேலுமணி டீம்; இறுதிக்கட்ட ஆலோசனையில் விஜய்?

post image

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று 5 நாள்கள் ஆகிவிட்டன. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றருந்தனர். அவர்களுக்கான இலாக்கா இன்னும் ஒதுக்கப்படவில்லை. எஞ்சிய அமைச்சர்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், விஜய்க்கு ஆதரவளித்த அதிமுகவின் சி.வி.சண்முகம் அணியினர் தங்களுக்கு அமைச்சரவையில் குறைந்தபட்சமாக 5 இடங்களை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Velumani Team
Velumani Team

இதுதொடர்பாக பின்னணி விவரம் அறிந்த சில விவரப்புள்ளிகளிடம் பேசினோம், ''அதிமுகவில் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையிலான அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாளே சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் தவெகவின் மேல்மட்டத்தினருடன் தொடர்புக்கு வந்திருக்கின்றனர்.

ஆட்சிக்கு ஆதரவளித்தால் அமைச்சரவையில் பங்கு கிடைக்கும் என்பதாலயே கட்சியை உடைக்கும் அளவுக்கு இருவரும் வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். பின்னணி பேச்சுவார்த்தைகளின்படியே சி.வி.சண்முகம் அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

அதற்கு பலனாக அமைச்சரவையில் குறைந்தபட்சமாக 5 இடங்களையாவது சி.வி.சண்முகம் கோஷ்டி எதிர்பார்க்கிறது. தவெக முகாமில் அதிமுகவினரின் அமைச்சரவை எதிர்பார்ப்பு குறித்து இரண்டு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

CV Shanmugam
CV Shanmugam

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் அமைச்சரவை எதிர்பார்க்கும் அத்தனை பேர் மீதும் கடந்த காலத்தில் எக்கச்சக்க புகார்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. அவர்களை அமைச்சரவைக்குள் கொண்டு வந்துவிட்டு இனி தூய ஆட்சி என எப்படி பேச முடியும்? என்று ஒரு குழு முட்டுக்கட்டை போடுகிறது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம். இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதன் மூலம், எஞ்சியிருக்கும் அதிமுகவினரையும் அதிமுக வாக்குகளையும் நம் பக்கம் ஈர்த்துவிட முடியும் என இன்னொரு தரப்பும் விஜய்யின் காதில் கிசுகிசுத்திருக்கிறது.

5 அமைச்சரவை கூட பரவாயில்லை, ஆனால் முக்கியமான துறைகளை அல்லவா மனதில் வைத்து கேட்பார்கள் என ஒரு தயக்கமும் தவெக முகாமில் நிலவுகிறது'' என்கின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கை சி.வி.சண்முகம் பிரித்து வந்தால் நம்முடைய வேலை எளிதாகிவிடும் என தவெக முகாம் நினைத்தது. ஆனால், அப்படி நடக்காமல் இப்போது எடப்பாடியும் பஞ்சாயத்தைக் கூட்டும் நிலை உண்டாகியிருக்கிறது. ஒருவேளை தவெகவை ஆதரித்த எம்.எல்.ஏக்கள் டிஸ்மிஸ் ஆகும் சூழல் வரும்பட்சத்தில், அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Vijay
Vijay

அந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களையும் விசில் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றிப் பெறச் செய்து க்ளியர் மெஜாரிட்டியோடு ஆட்சியை நடத்தலாம் எனும் ஐடியாவும் விஜய்யிடம் சொல்லப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு: அமெரிக்காவிற்கு 'ஈரான்' பிரச்னை; சீனாவிற்கு 'தைவான்' பிரச்னை

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் சென்றிருக்கிறார். 2017-ம் ஆண்டு ட்ரம்ப், சீனா சென்றிருந்தார். அதன் பிறகு, இப்போது தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சீனா சென்ற... மேலும் பார்க்க

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

தனித்துச் சென்ற வேலுமணி!""மிரட்டிய எடப்பாடி...அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழிய... மேலும் பார்க்க

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" - உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'புஷ்பா' படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்க... மேலும் பார்க்க

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க