செய்திகள் :

`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வீரிசெட்டிபல்லி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). விவசாயியான இவர், கறவை மாடு வளர்ப்பு மூலமாக கிடைக்கும் குறைவான பால் வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார். இரும்பு தகரம் பொருத்தப்பட்ட கூரை வீட்டில்தான் பிரபாகர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து பிரபாகருக்கு ஒரு நோட்டீஸ் வந்திருக்கிறது.

விவசாயி பிரபாகர்

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் `ராஜூ டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தை பிரபாகர் நடத்தி வருவதாகவும், 2023-2024-ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி வரித்தொகையை கட்டாத காரணத்தினால், அதற்கான அபராதத்துடன் சேர்த்து மொத்தமாக 2,47,77,029 ரூபாயை ஏழு நாள்களுக்குள் ஆன்லைன் பேமெண்ட் மூலமாக செலுத்த வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுத்து தொகை வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான பிரபாகர் உடனடியாக ஆம்பூர் ஜி.எஸ்.டி உதவி ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு `அப்படியொரு நிறுவனத்தை நான் நடத்தவில்லை’ என விளக்கமளித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பரதராமி காவல் நிலையம் சென்றும் தன் பெயரிலான ஜி.எஸ்.டி மோசடி பற்றி புகார் அளித்திருக்கிறார். இந்த வரிவிதிப்பால் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறது பிரபாகரின் குடும்பம்.

திருமணத்தை மீறிய உறவு; கணவருடன் தனிமையில் இருந்த பெண்ணை கொலை செய்து புதைத்த மனைவி- நடந்தது என்ன?

தூத்துக்குடி, சங்கரப்பேரி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர், காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தாதேவி. இவருக்கும் கிருஷ்ணகுமார் என்பவருக்கும்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் பஸ்ஸுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - டெல்லியில் பயங்கரம்

நாட்டின் தலைநகர் டெல்லியின் நங்லோய் பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்துக்குள் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூ... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை! - என்ன நடந்தது?

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கோகுல். தன்னுடைய நண்பர்களான‌ மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்குச் செ... மேலும் பார்க்க

நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழு... மேலும் பார்க்க

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க