செய்திகள் :

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

post image

அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழியாக, அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அமித் ஷாவிற்குச் செல்கிறது. எடப்பாடியுடனும் நெருக்கமாக இருக்கிறாராம் அந்த தொழிலதிபர். இந்தச்சூழலில், 'நீங்கள் தனியாகச் சென்றால், உங்கள் மீது ரெய்டு நடத்த வைப்பேன்.

வேலுமணி

எனக்கும் அந்த தொழிலதிபருக்கும் இடையேயான நெருக்கம் உங்களுக்குத் தெரிந்ததுதான். வீணாக என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்...' என 'வேலுமணி அண்ட் கோ'வை எடப்பாடி மிரட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த வேலுமணி தரப்பு தனியாக பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதற்கு இந்த விவகாரமும் ஒரு காரணமாம்.!

சட்டமன்றத் தேர்தல் தோல்வி, தி.மு.க இளைஞர் அணி செயலர் உதயநிதியை ரொம்பவே பாதித்திருக்கிறதாம். அதிலும், தன் தந்தை ஸ்டாலின் தோல்வியடைந்ததை இப்போதுவரை உதயநிதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். தனது தனிப்பட்ட அரசியல் ஆலோசகரிடம் தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார் உதயநிதி. அப்போது, 'பல தொகுதிகளில் உள்ளடி வேலைகள் தான் முக்கிய காரணம்' என்று ஆலோசகர் சொல்லியிருக்கிறார்.

உதயநிதி

அதைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக யார் யார் உள்ளடி வேலை பார்த்தார்கள் என்ற தகவலை சேகரித்துக் கொண்டிருக்கிறாராம் உதயநிதி. விரைவிலேயே மாவட்ட அளவில் பெரிய மாற்றத்துக்குத் தயாராகிறது தி.மு.க. இதனால் உள்ளடி வேலையில் ஈடுபடப் பலரும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.

கடந்த ஆட்சியில் தண்ணீர் துறையின் 'திலக' அதிகாரி, அப்போதிருந்த மாண்புமிகு உடனான நெருக்கத்தால் பவர் சென்டராக திகழ்ந்தார். அதிகாரிகள் மாறினாலும், அவர் மீது விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தினாலும் அவரது வளர்ச்சி மட்டும் கடந்த ஆட்சியில் குறையவே இல்லை. இந்தச் சூழலில், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில் அந்த 'திலக' அதிகாரியும் துறையிலிருக்கும் மொழி அதிகாரியும் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்கள் உதவியுடன் ஆளும் தரப்பில் உள்ள 'ஆனந்தமான' மாண்புமிகுவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

'அமைச்சர் யாராக இருந்தாலும் துறையை நாங்க நல்லபடியாக பார்த்துகிறோம். கூடவே, கட்சிக்கு வர வேண்டியதையெல்லாம் சரியா கொண்டுவந்து சேர்த்துவிடுகிறோம். எங்களுக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும்' என்று பேசியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஐந்து வருடம் துறையை நாசம் செய்தது போதாதென்று இப்போது இந்த ஆட்சியிலும் பதம் பார்க்க அடி போடுகிறார்களாம் அந்த அதிகாரிகள்.

பொதுப்பணித்துறையில், சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்பு சில பணிகளுக்கு டென்டர் விடப்பட்டதாம். அந்த பணிகளை எடுத்த ஒப்பந்தகாரர்களிடம் மணியான அதிகாரி ஒருவர் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறாராம். அந்த அதிகாரி, புதிய ஆட்சியிலும் தொடர்ந்தால் நிச்சயம் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என ஒப்பந்தகாரர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த புலம்பலுக்கு இடையே, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் பராமரிப்பு பணிகள் என மாதந்தோறும் சில ஸ்விட் பாக்ஸ்களை சுருட்டி வந்த இன்ஜினீயர் ஒருவரின் தில்லுமுல்லு குறித்த ஆதாரம் கிடைத்திருக்கிறதாம். அதை பொதுப்பணித்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால், துறைக்குள் அனல் கூடிக்கொண்டே போகிறது. இந்த விஷயத்தை துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டதும், அவரிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்க துறைக்குள்ளேயே சிலர் தயாராகின்றனர்.!

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" - உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'புஷ்பா' படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்க... மேலும் பார்க்க

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க

கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சி.பி.எம் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 71 எ... மேலும் பார்க்க

"மகளிர் உரிமைத்தொகை விரைவில் நேரடியாக வரவு; மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை" - தமிழ்நாடு அரசு

2021 டு 2026 திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைப்பதே இந்தத் திட்டம். தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில... மேலும் பார்க்க