செய்திகள் :

TVK: சேலத்தில் நடைமுறைக்கு வந்தது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; பணிகள் என்ன?

post image

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் முதல் முதல்நாள் கையெழுத்திட்ட‌ இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த காவல்துறை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் அணில் குமார் கிரி இந்தச் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்துள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் பணிகள் குறித்து தெரிவித்த சேலம் மாநகர காவல்துறையினர், " சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேரடியாக முதலமைச்சர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும்.

1 காவல் உதவி ஆணையாளர், 1 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என 6 பேர் இருப்பார்கள். நான்கு சக்கர வாகனம், தொடர்பு சாதனங்கள், காவல்துறையினரின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் 'பாடி ஓன்' கேமிராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

குற்றச் சம்பவங்கள் நடைபெறும் அல்லது நடைபெற வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பது, பொது இடங்களில் தொடர்ந்து சுற்றுக்காவல் மேற்கொண்டு பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுதல்,

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த மனுக்களுக்கு உடனடி மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வது, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என மொத்ததில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உத்திகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும்" என்றனர்.

15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்ய... மேலும் பார்க்க

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம். அமைச்சகம் என்ன சொல்கிறது? வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா ச... மேலும் பார்க்க

நிழல் உலகின் பிடியில் NEET: கனவுகளைத் திருடிய வினாத்தாள் கசிவு; நீட் முறைகேட்டின் விரிவான பின்னணி!

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட்-யூஜி (NEET-UG 2026) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்புதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து... மேலும் பார்க்க

IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை, டாஸ்மாக் நிறுவனத்திற்கு புதிய மேலாண் இயக்குநர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தலைமைச் செயலாளர் எம். சாய் கும... மேலும் பார்க்க

`சிங்கப்பெண் அதிரடிப் படை' - முதல்வர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில்... முழு விவரம்!

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்: முதல் சட்டமன்றக் கூட்டம்... எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி! |TN News Live Update

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் முதல்வர் நாற்காலியில் விஜய்தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக... மேலும் பார்க்க