`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை ...
'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் நேற்று ( மே. 6) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனிடையே தான் திமுகவும் , அதிமுகவும் கூட்டணி வைக்கயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய ஒரு வீடியோவை ஷூட்டிங் செய்தபோது, அவர் பேசிய ஒரு கருத்தை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்ய ஒரு சிறிய மாற்றம் செய்யச் சொன்னேன்.
ஆனால், அது எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும் என்று' கூறி அவர் மறுத்துவிட்டார். அவர் ஓர் அபூர்வமான மனிதர். வதந்திகளை நம்பாதீர்கள் மக்களே" என்று தெரிவித்திருக்கிறார்.














