செய்திகள் :

`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை... நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்

post image

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 18ம் தேதியன்று புனே லோஹாகட் கோட்டையிலிருந்து தள்ளிவிட்டுக் கொல்லப்பட்ட கேதன் அகர்வால் கொலை வழக்கில் இந்த அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் ஆதாரம் கிடைத்துள்ளது. ஷியாவும், சேத்தனும் சேர்ந்து கேதன் அகர்வாலை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள இருவரது மொபைல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை மீட்டெடுத்த புனே போலீஸார், இந்த ரகசியத் திருமணத்தை அதிகாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளனர்.

ஷியா

ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண முக்கோணக் காதலாக தோன்றினாலும், போலீஸார் நடத்திய சைபர் தடயவியல் விசாரணையில் வெளிவந்த டிஜிட்டல் சான்றுகள் ஒட்டுமொத்த விசாரணைக் குழுவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் போன்களிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்துக்கான போன் கால்கள், இருப்பிடத் தரவுகள் (Location Data), சாட்டிங்குகள் மற்றும் இணைய தேடல் வரலாறு ஆகியவற்றை போலீஸார் மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இந்த டிஜிட்டல் தரவுகளை ஆய்வு செய்தபோதுதான், ஷியாவும் சேத்தனும் தங்களது குடும்பத்தினருக்குப் பயந்து, நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் உண்மை போலீஸாருக்குத் தெரியவந்தது.

திருமணத்திற்குப் பிறகு கொலை சதி

இந்த ரகசியத் திருமணத்திற்குப் பிறகுதான், தங்களது ரகசிய வாழ்க்கை வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கேதனைத் தீர்த்துக்கட்ட ஷியாவும் சேத்தனும் சதித்திட்டம் தீட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கேதன் அகர்வாலைக் கொல்வதற்கான முதல் முயற்சி ஜூன் 14 அன்றே செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அன்று ஷியா கோயல், கேதனை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கடைசி நிமிடத்தில் ஷியாவிற்குத் துணிச்சல் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு, சியா உடனடியாகக் காதலர் சேத்தன் சவுத்ரிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “எனக்கு தனியாக இதைச் செய்யத் துணிச்சல் இல்லை, நீயும் வா — நாம் இருவரும் சேர்ந்து அவனைப் பள்ளத்தில் தள்ளிவிடுவோம்” என்று அவர் அனுப்பிய மெசேஜை, சைபர் போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.

போலீஸார் நடத்திய டிஜிட்டல் தடயவியல் ஆய்வில், ஷியா கோயல் மற்றும் அவரது காதலர் சேந்தன் சவுத்ரி ஆகியோர் இந்தக் கொடூரக் கொலையைச் செய்வதற்கு முன்பாக, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு கொலை வழக்கைப் பற்றி மிகத் தீவிரமாக இணையத்தில் ஆராய்ச்சி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜாவை மேகாலயா அழைத்துச் சென்று கொலை செய்த விவகாரத்தில் சோனம் செய்த தவறுகளை தாங்கள் செய்து விடக் கூடாது என்பதற்காக அக்கொலை வழக்கை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். சோனம் திருமணத்திற்குப் பிறகு கணவனை கொலை செய்தார். ஆனால் ஷியா திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவனை கொலை செய்துள்ளார்.

குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது. இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் ... மேலும் பார்க்க

சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியா... மேலும் பார்க்க

`நாலாவது குழந்தைய எப்படி வளர்க்க போறீங்க? பேசாம வித்துடலாம்' - காரைக்குடியை உலுக்கிய குழந்தை விற்பனை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்றபோது வாக்குவாதம்; நடுரோட்டில் மனைவியை சுட்டுத் தள்ளிவிட்டு சென்ற டெல்லி போலீஸ்காரர்

டெல்லி போலீஸின் வாகன திருட்டு தடுப்பு படையில் பணியாற்றி வருபவர் மனீஷ்பதி. இவரது மனைவி பிரியங்கா. அவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொ... மேலும் பார்க்க

சேலம்: மூடியிருந்த அம்பேத்கர் சிலையைத் திறந்த நபர்கள்; கல்வீச்சு, தடியடி என விடியவிடிய வன்முறை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் உறவுக்காரப் பெண்ணை Follow செய்த நபர்; கொலையில் முடிந்த பேச்சுவார்த்தை; குஜராத்தில் பகீர்

குஜராத் மாநிலம் போடாட் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பெண்ணிற்குக் கொடுக்கப்பட்ட நட்பு கோரிக்கை கொலையில் முடிந்துள்ளது. காஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜ், சக்திசிங் என்பவரின் உறவினரான ஒரு பெண்ணுக்... மேலும் பார்க்க