செய்திகள் :

``என் மகன் அல்ல, நானே வேட்பாளர்; நாளை மனு தாக்கல் செய்கிறேன்’’ - ராணிப்பேட்டை காந்தி எக்ஸ்க்ளூசிவ்!

post image

ராணிப்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 1996-ல் முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் காந்தி. அதைத்தொடர்ந்து, 2001 தேர்தலில் தோல்வி, 2006-ல் மீண்டும் வெற்றி, 2011-ல் மீண்டும் தோல்வி, 2016 தேர்தலில் வெற்றி என ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என தனது அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார் காந்தி.

`ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட் இதுதான்’ என்று அரசியல் கட்சிகள் கருதின. ஆனால், அந்த சென்டிமென்ட்டை 2021 தேர்தலில் உடைத்தெறிந்து, சட்டமன்றத்துக்கு 4-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் காந்தி. இதனால், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகும் அதிர்ஷ்டமும் காந்திக்கு கிடைத்தது.

வினோத் காந்தி

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் சீட் எதிர்பார்த்த காந்திக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. காந்திக்குப் பதிலாக அவரின் மூத்த மகன் வினோத் காந்தியை வேட்பாளராக அறிவித்தது தி.மு.க தலைமை. இதனால், காந்தி கடும் அதிருப்தியடைந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நடத்தப்படாமல் இருந்தது.

`வினோத் காந்தியை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று உடன்பிறப்புகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினார்கள். இதனால், தற்போது வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு, வினோத் காந்திக்குப் பதிலாக அமைச்சர் காந்திக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்து, `விகடன்’ நிருபரிடம் பேசிய அமைச்சர் காந்தி, ``நான்தான் வேட்பாளர் என்பது உறுதியான தகவல். தலைமை அறிவித்துவிட்டது. நாளை மதியம் 12 மணியளவில், வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கு மகனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க