செய்திகள் :

"என் 200-வது IPL போட்டியில் விளையாடும் திறமையை கடவுள் கொடுத்திருக்கிறார்" - ஆட்டநாயகன் சுனில் நரேன்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.16) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகுப் பேசிய சுனில் நரேன், "இந்த விருது கடின உழைப்பிற்குக் கிடைத்திருக்கிறது. வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகத் தயாராகி வருகிறார்கள்.

சுனில் நரேன்
சுனில் நரேன்

நாங்கள் மைதானத்தில் கடுமையாக உழைத்து வருகிறோம், அதற்கான பலன்தான் இப்போது தெரிகிறது. இந்தத் தொடர் நமக்கு என்ன மாதிரியான சூழ்நிலைகளை வைத்திருந்தாலும், நாம் இதேபோல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு போட்டியும் ஒரு புதிய சவாலைக் கொண்டு வரும், அந்தச் சவாலை முறியடித்து வெற்றி பெறுவதற்கான முயற்சிகளைத்தான் நாங்கள் செய்கிறோம்.

நேற்றும் அந்தச் சவால் இருந்தது, அடுத்த போட்டியில் வேறு மாதிரி இருக்கலாம், ஆனால் நமக்கு முன்னால் இருக்கும் சூழ்நிலைகளைச் சமாளித்து வெற்றி பெற முயல்வதுதான் முக்கியம்.

அதிகமாக யோசிக்காமல் இருக்க வேண்டும். நாம் விஷயங்களை அதிகமாக யோசித்தால், அது வழக்கத்தை விடக் கொஞ்சம் கடினமாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

KKR
KKR

ஒரு சீனியர் வீரராக இருப்பதும், என்னுடைய 200-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்குத் தேவையான திறமையையும், உடல்நலத்தையும், வலிமையையும் கடவுள் எனக்குக் கொடுத்திருப்பதும் ஒரு ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன்.

இது நீண்ட தூரப் பயணம், இந்தப் பயணம் இன்னும் தொடர்கிறது. எனவே, என்னால் முடிந்தவரை நீண்ட காலம் விளையாடி, இதேபோன்ற சிறந்த ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

"அசாதாரணமான LSG பேட்டிங், சிரமப்பட்ட CSK பேட்டிங்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த... மேலும் பார்க்க

PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-14) ஆட்டத்தில் பஞ்சாப் vs மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி வீழ்த்தியிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகள... மேலும் பார்க்க

CSK: காத்திருக்கும் ரன் ரேட் சவால்; Playoffs சுற்றுக்குத் தகுதி பெறுமா சென்னை அணி?

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித... மேலும் பார்க்க

RCB: "கிரிக்கெட் மீது எனக்கு இருக்கும் தீராத காதலே என்னை இன்றும் இயக்கி வருகிறது" - ஆட்டநாயகன் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற கொல்கத்தா vs பெங்களூரு போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் விராட் கோலி. இவரின் இந்த சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் முத... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் 'Unfollow'... மும்பை அணிக்கு துரோகமா? - ஹர்திக் மீது பாய்ந்த முன்னாள் வீரர்கள்!

ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்... மேலும் பார்க்க

IPL 2026: புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்! - பிளே-ஆஃப் சுற்றை எட்டப்போகும் 4 அணிகள் எவை எவை?

ஐபிஎல் 2026 சீசன் அதன் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது! மைதானத்தில் பந்துகள் பறப்பதைக் காட்டிலும், புள்ளிப்பட்டியலில் அணிகள் முன்னும் பின்னும் நகருவதைப் பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு இப்போது பெரிய சுவாரச... மேலும் பார்க்க