செய்திகள் :

"எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தலாமா?" - நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு நாசர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

post image

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் குறித்த பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போது, காந்தாராவ் நடித்த கதாபாத்திரங்கள், அவர் நடித்த காலத்தில் இருந்த நடிப்பு தரம், சினிமாவுக்காக அவர் செய்த பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்து அவர் பெருமையாக குறிப்பிட்டார். காந்தாராவைப் புகழ்ந்து பேசும் போது, "அவரது படங்களை பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் கூட பயந்துபோய்விடுவார்" என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த கருத்து தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

அந்த ஒப்பீடு எம்.ஜி.ஆரை குறைத்து பேசுவது போல இருந்ததாக பலர் குற்றச்சாட்டு எழுப்பினர். நடிகர் விஷால் தன் எக்ஸ் பதிவில், ``சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசிய சில கருத்துகளை பார்க்கவும் கேட்கவும் மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. எங்கள் அனைவராலும் மரியாதையுடன் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆர் குறித்து அந்த மாதிரி பேசப்பட்டதை ஏற்க முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ``எனது அருமை நண்பர் ராஜேந்திர பிரசாத் காரு அவர்களுக்கு, நீங்கள் மூத்த நடிகர் காந்தா ராவின் கலையைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கலைஞர் சக கலைஞரைப் பாராட்டுவது ஆரோக்கியமானது. ஆனால், அந்தப் பேச்சின் இடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக நீங்கள் செய்த ஒப்பீடு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்தத் தமிழர்களும் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, உங்கள் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞர்களே இது குறித்து வருத்தம் தெரிவித்து எனக்கு ஆடியோக்களை அனுப்பியுள்ளனர்.

நாசர்
நாசர்

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகிற்கு இடையே பல ஆண்டுகாலப் பாரம்பரியமும், கலைப் பரிமாற்றமும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் அல்லது கலைஞர் மட்டுமல்ல. அவர் ஒரு மகத்தான தலைவர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்களை ஆட்சி செய்தவர். ஆந்திராவின் மறைந்த முதல்வர் என்.டி.ஆர் அவர்கள் கட்சித் தொடங்கிய போது அவருக்கு முக்கிய ஆலோசகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அரசியல் கடந்து நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற பதவியைத் தாண்டி, திரையுலகின் ஒரு அங்கமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் இதயத்திலிருந்து இதற்காக ஒரு மன்னிப்பைக் கோருங்கள். நீங்கள் அதைச் செய்வீர்கள் என நம்புகிறேன்," எனத் தெரிவித்திருக்கிறார்.

நெல்லை: 'ஏஞ்சல், கோல்ட் ஃபிஷ்' - கண்ணைக் கவரும் தமிழக அரசின் வண்ண மீன் காட்சியகம்! | Photo Album

பார்ப்ஸ், ஏஞ்சல், கோல்ட் ஃபிஷ்.! கண்ணை கவரும் தமிழக அரசின் நெல்லை வண்ணமீன் காட்சியகம்.!மீன் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளும், நவீன சந்தை உத்திகளும்! - வழிகாட்டும் வல்லுநர்! மேலும் பார்க்க

The Wedding of VIROSH: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் திருமணம்: விஜய் - ராஷ்மிகா வெட்டிங் டைரி!

திரையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கெமிஸ்ட்ரி என்பது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அது ஒரு கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். தென்னிந்திய சினிமாவில் மிகச் சில ஜோடிகளுக்கு மட்டுமே அமைந்த அந... மேலும் பார்க்க

`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம... மேலும் பார்க்க

'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவ... மேலும் பார்க்க

1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!

``கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு க... மேலும் பார்க்க

நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க