செய்திகள் :

``எம்.பி-க்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?" - மாணிக்கம் தாகூர்

post image

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களவைச் செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில், ``நாடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு, தனிநபர் தனியுரிமை அல்லது நாடாளுமன்றச் சலுகைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வாட்சுகள் (smart watches) மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகள் (smart spectacles) போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நவீன மின்னணு சாதனங்கள் தற்போது பரவலாகக் கிடைக்கிறது. இவற்றில் சில சாதனங்கள், உறுப்பினர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், நாடாளுமன்றச் சலுகைகளை மீறும் வகையிலும் பயன்படுத்தப்படக்கூடும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக் கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக் கூடாது! அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? ​போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை... நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது! ​பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்.

நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்! - நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்னைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த 'புதிய இந்தியா'வின் லட்சணமா? - மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்! ​இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"ரெண்டு சீட் வெச்சிக்கிட்டு இவ்ளோ ஆட்டமானு கேட்குறாங்க, ஆனா..!” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுகவை மறைமுகமாக சாடியிருக்கிறார். " 'இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆட்டமானு கேக்குறாங்க'... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க திட்டமா?' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக த... மேலும் பார்க்க

Sonam Wangchuk: ``மோடி அரசு தொடர்ந்து பாராமுகமாக இருக்குமானால்..." - எம்.பி ஆ.ராசா

‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டி... மேலும் பார்க்க

"ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்?

பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி, " ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள். சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் ... மேலும் பார்க்க

``இந்த இரண்டு தவறுகளையும் நான் செய்திருக்கக் கூடாது!" - கடந்த காலத்தை நினைத்து வருந்தும் வைகோ

மறுமலர்ச்சி திமுகவின் அதிராரபூர்வ ஏடான ‘சங்கொலி’யின் முப்பதாவது ஆண்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது.வைகோ உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அ... மேலும் பார்க்க