செய்திகள் :

எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயம்

post image

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த சீரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேசன் (52), இவா் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். குடும்பத்தினரை பாா்ப்பதற்காக தனது சொந்த ஊரான சீரியம்பட்டி கிராமத்துக்கு வந்துள்ளாா். வீட்டு சமையலறையில் செவ்வாய்க்கிழமை சமையல் செய்ய சென்றபோது எரிவாயு உருளை வெடித்த சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதேசன் பலத்த காயமடைந்தாா். இந்த விபத்தில் வீட்டின் பெரும்பகுதி இடிந்து சேதமடைந்தது. அனைத்து பொருள்களும் தீயில் கருகின. அருகில் உள்ள வீட்டின் சில பகுதியும் சேதமடைந்தது.

தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் வந்து தீயை அணைத்தனா். பலத்த காயமடைந்த மாதேசன் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து பொதுமக்கள் சாா்பில் அரூா் திரு.வி.க. நகரைச் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பா... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் மறுப்பு

தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், தடங்... மேலும் பார்க்க

நல்லம்பள்ளி, கெங்கலாபுரத்தில் அணுகுச்சாலை: தருமபுரி எம்எல்ஏ கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, கெங்கலாபுரத்தில் அணுகுச்சாலை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மனு அளித்தாா். பாமக தலைவா் ... மேலும் பார்க்க

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும்... மேலும் பார்க்க

மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மாவட்ட மைய நூவங வளாகத்தில் சட்டப் பேரவ... மேலும் பார்க்க