செய்திகள் :

`எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம்... ராசாவைக் கண்டிக்க வேண்டும்!' - ஆதவ் அர்ஜுனா

post image

த.வெ.க அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக வன்னியரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகானும் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அ.ராசாவின் பதிவு

த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா, "முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்', மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்', வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்..." என்று விசிகவை கடுமையாகச் சாடியிருந்தார்.

ஆனால் ஆ.ராசா இந்தப் பதிவை உடனே நீக்கிவிட்டார். அவரின் இந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 ஆ. ராசா
ஆ. ராசா

ஆதவ் அர்ஜுனா கண்டனம்

இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, "அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார் விஜய். இந்தியாவே பார்த்து வியக்கக்கூடிய அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறோம்.

பெரும்பான்மை இல்லாதபோது அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் நாங்கள் ஆட்சி அமைத்திருக்க முடியும். மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றோம்.

விமர்சனத்தை நாங்கள் கண்டிக்கிறோம்

அண்ணன் திருமாவளவன் மீதான ஆ.ராசாவின் இந்த விமர்சனத்தை நாங்கள் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சி அரசியலை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் ஒரு கட்சியின் தலைவரையோ அல்லது தனிநபர் விமர்சனத்தையோ, தொண்டர்களையோ பெண்களின் உறவை மையப்படுத்தி பேசுவதை பெரியாரும், அண்ணாவும் கற்றுக்கொடுத்தது அல்ல.

சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்
சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்

ஸ்டாலினின் விளக்கம் என்ன?

கடமை, கண்ணியம் என்று பேசும் திமுகவிற்கு இது எதுவும் இல்லை. கலைஞரின் கோட்பாடுகளை எல்லாம் மறந்துவிட்டார்கள். ஆ.ராசாவின் பதிவிற்கு ஸ்டாலினின் விளக்கம் என்ன? எங்களுக்கு இருக்கும் ஜனநாயக பண்பு 75 ஆண்டுக்காலம் ஆண்ட திமுகவிற்கு இல்லை.

அண்ணன் ஆ.ராசா அவர்களின் பதிவை கண்டிக்கிறோம். தமிழக மக்களிடமும் அண்ணன் திருமாவளவனிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம் பெண்ணைத் தொடர்புபடுத்தி ஆ.ராசா வெளியிட்டிருந்த பதிவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

தமிழக முதலமைச்சர் தலைமையிலான த.வெ.க அரசில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சீ.ரமேஷ் பதவியேற்றிருக்கிறார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை விமர்சித... மேலும் பார்க்க

ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்... மேலும் பார்க்க

மேகதாது அணை: `எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா? சிவக்குமாரின் ஆணவப் பேச்சு'- டிடிவி கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க, தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று அந்த மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர் `டு' தவெக அரசில் அமைச்சர் - யார் இந்த ஏ.எம்.ஷாஜஹான்!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தவெக அரசில் சிறுபான்மையினர் நலத்த... மேலும் பார்க்க

தங்கமணியை வீழ்த்தி அதிமுக கோட்டையை கைப்பற்றிய கணக்கர்! – பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பின்னணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக பால்வளத்துறை அமைச்சருமான திருமதி விஜயலட்சுமி, 1975 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ... மேலும் பார்க்க