செய்திகள் :

மேகதாது அணை: `எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா? சிவக்குமாரின் ஆணவப் பேச்சு'- டிடிவி கண்டனம்

post image

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க, தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று அந்த மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். அவரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அ.மு.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா? - கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதல்வர் திரு டி கே சிவக்குமார் அவர்களின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை எனவும், அணைக் கட்டுமான பணிக்கான திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம் எனவும் கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசும், அதன் துணை முதல்வரும் தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் மாநிலங்களின் அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியை முடக்குவதில் வேகம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்

ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், விவசாயிகளின் நலனுமே முக்கியம் என்பதை உணர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

தமிழக முதலமைச்சர் தலைமையிலான த.வெ.க அரசில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சீ.ரமேஷ் பதவியேற்றிருக்கிறார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை விமர்சித... மேலும் பார்க்க

ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர் `டு' தவெக அரசில் அமைச்சர் - யார் இந்த ஏ.எம்.ஷாஜஹான்!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தவெக அரசில் சிறுபான்மையினர் நலத்த... மேலும் பார்க்க

தங்கமணியை வீழ்த்தி அதிமுக கோட்டையை கைப்பற்றிய கணக்கர்! – பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பின்னணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக பால்வளத்துறை அமைச்சருமான திருமதி விஜயலட்சுமி, 1975 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

`எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம்... ராசாவைக் கண்டிக்க வேண்டும்!' - ஆதவ் அர்ஜுனா

த.வெ.க அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக வன்னியரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகானும் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அ.ராசாவின் பதிவு த.வெ.க அமைச்சரவையில் விச... மேலும் பார்க்க