செய்திகள் :

“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” - பிரவீண் சக்கரவர்த்தி சாடல்

post image

நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.

தன்னுடைய தொகுதிக்குத் தொண்டாற்றுவதற்கும், தமிழ்நாடு பாஜக-வை வலுப்படுத்தவும் இந்த ராஜினாமா என்று தனது ராஜினாமாக் கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீண் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மறந்துவிட வேண்டாம்... தேர்தலுக்கு முன்பு, ‘ஜன நாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, ரெட் ஜெயண்டின் ‘பராசக்தி’ படத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து,

மாண்புமிகு அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் மோடி பிரமாண்ட பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்தத் திட்டம் தேர்தலில் பலனளிக்கவில்லை.

தற்போது, அதே மோடி, எல். முருகனை அமைச்சரவையிலிருந்து எவ்வித மரியாதையும் இன்றி நீக்கியுள்ளார்.

இப்போது மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

எல்.முருகன்தான் ராஜினாமா செய்ததாகத்தான் தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரவீண் சக்கரவர்த்தியோ ‘பதவி நீக்கம்’ என்று கூறுகிறார்.

``வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை..." - தவெக அரசை சாடும் ஸ்டாலின்!

வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தவெக அரசின் நிர்வாகம் குறித்த... மேலும் பார்க்க

இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?

நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவி... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு; முன்னாள் மண்டலத் தலைவரின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்... மேலும் பார்க்க

சிறையில் சிஜேபி தலைவர்கள்: ``துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" - அபிஜித் ஆவேசம்

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரின் பணியைத் தடுக்க முயன்றதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆண... மேலும் பார்க்க

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" - ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்... சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளது என்று இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டத்தையும், எதிர்ப்புக் குரலையும் முன்னெடு... மேலும் பார்க்க