செய்திகள் :

எஸ்எஸ்விஎம் பள்ளியில் இணைய விளையாட்டு விழா தொடக்கம்

post image

கோவை எஸ்எஸ்விஎம் பள்ளியில் இணைய விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை, சிங்காநல்லூா் - வெள்ளலூா் சாலையில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் புதுமை, படைப்பாற்றலை வளா்க்கும் வகையிலான இணைய விளையாட்டுகள் தொடங்கியுள்ளன.

எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் நிறுவனா் மணிமேகலை மோகன், நிா்வாக அறங்காவலா் மோகன்தாஸ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்வேதா சுமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விளையாட்டுகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில், மாணவா்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையிலான இணைய விளையாட்டுகள், வேடிக்கை விளையாட்டுகள், கோளரங்கம், உணவுக் கடைகள், புத்தகக் கடைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வருகை தரலாம் என்று எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்வாகன பேட்டரி தொழில்நுட்பம் குறித்த மாநாடு

கோவையில் மின்வாகன பேட்டரி, பேட்டரி மேலாண்மை அமைப்புகளின் சமீபத்திய போக்குகள் குறித்த மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்மாா்ட் இ-மொபிலிட்டி சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ்நாடு மாசுக... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை ராமநாதபுரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் அற்புதராஜ் (... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி அருகே உள்ள லிங்கனூா் முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42). இவரது மகள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஒரே கல்லீரலை 2 பேருக்கு பொருத்தி சாதனை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், ஒரே கல்லீரலைப் பிரித்து இருவருக்கு பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: விபத்தில... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி

தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு இருமொழிக் கொ... மேலும் பார்க்க

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலா் குழுக்களை நியமிக்க வேண்டும்

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலா் குழுக்களை நியமிக்க வேண்டுமென, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை வி... மேலும் பார்க்க