செய்திகள் :

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

post image

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழா மேடையில் திருமாவளவன் எம்.பி பேசுகையில், "நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே தோழரின் 'இருத்தலியமும் மார்க்சியமும்' என்கிற நூலையும், 'கம்யூனிச அறிக்கை' என்கிற நூலையும் படித்திருக்கிறேன்.

அப்போது எனக்குப் பெரிய புரிதல் இல்லை. என்றாலும், அது எங்களின் பார்வையை விசாலப்படுத்தியது. இன்றைக்கு நாங்கள் எந்தக் கோணத்தில் அரசியலைப் பார்க்கிறோமோ, எந்தக் களத்தில் போராடுகிறோமோ அதற்கு எஸ்.வி.ஆர் அவர்களின் சிந்தனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

திருமாவளவன்
திருமாவளவன்

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கிற ஒரு புதிய முயற்சி, இவை வேறு வேறு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிற பங்களிப்பு அளப்பரியது.

'இந்து, இந்தி, இந்தியா' என்கிற அவரது நூல் ஒவ்வோர் இளைஞரும் படிக்கவேண்டிய ஒன்று. இன்றைய அரசியல் சூழலில் அது மிகவும் அவசியமானது.

மற்றொரு முக்கியமான செய்தி... நளினி விடுதலையிலும் தோழர் எஸ்.வி.ஆரின் பங்கு மகத்தானது. மரண தண்டனையை ஒழிப்பதற்காக ஓர் இயக்கத்தைக் கட்டியவர். வி.வி.கிரி அவர்களின் மகள் மோகினி கிரி.

அவர்களை அழைத்து வந்து சென்னையில் நிகழ்ச்சி நடத்தினார். அதன் பிறகுதான் சோனியா காந்தி அம்மையாரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, நளினியின் மரண தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்தினார்.

அதனடிப்படையில்தான் நளினி மரண தண்டனையிலிருந்து விடுதலை பெற்றார் என்கிற வரலாறு பதிவாகியிருக்கிறது.

PUCL என்கிற மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்கியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப் பல்வேறு தளங்களில் பன்முகத் திறமைகொண்ட ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்குபவர் ஐயா எஸ்.வி.ஆர்.

சமரசமற்ற போராட்ட குணமும், ஆழ்ந்த அறிவுப்புலமும்கொண்ட இவருக்கு, `பெருந்தமிழர் விருது' வழங்குவது அந்த விருதுக்கே பெருமை'' என்று கூறினார்.

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்க... மேலும் பார்க்க

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்ச... மேலும் பார்க்க

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம். அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த... மேலும் பார்க்க

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எ... மேலும் பார்க்க

``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா பேச்சு

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை... மேலும் பார்க்க