செய்திகள் :

`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்' - நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அலியின் மனைவி!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை, 2025, ஜனவரி 17 அன்று மணல் மாஃபியாக்கள் கொடூரமாகக் கொலைசெய்தனர். 15 ஆண்டுக்கால சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தன் இன்னுயிரையே ஈந்த இந்த வீரத்தியாகியின் நினைவாக, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025-ன் `டாப் 10 மனிதர்’ பிரிவில், `உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்ட ஜகபர் அலியின் மனைவி கண்ணீர்மல்கப் பேசினார். அப்போது, "சின்னச் சின்ன உதவிகளை மக்களுக்குச் செய்துகொண்டு, சாதாரண வருமானத்தில் எங்களை அவர் பார்த்துக்கொண்டார். ஆனால், மலைகளையும் ஆறுகளையும் திருடுபவர்களைப் பார்த்தால் அவரால் சகித்துக்கொள்ள முடியாது.

'நீங்க போனா ஆபத்து' என்று நான் தடுத்தபோதெல்லாம், 'இப்படித் திருட்டு நடந்தால் நாளைக்கு நம் பிள்ளைங்க எங்கே வாழும்?' என்று கேட்டுவிட்டுப் போவார். மிரட்டல் வந்தபோதுகூட அவர் பணியவில்லை. இன்று அவர் இல்லை என்றாலும், அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்" என்று நெகிழ்ந்தார்.

இந்த விருதை வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., "கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார்.

குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது. ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் 'மாமனிதர்' என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது. இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும்" என்றார்.

நம்பிக்கை விருதுகள் 2025
நம்பிக்கை விருதுகள் 2025

'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' - சகாயம் IAS

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. இவருக்கு இந்த ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'உயிர் கொடுத்து மலை காத்தவர்' விருதை வழங்கி சிறப்பித்தது ஆனந்த விகடன்.இந்த... மேலும் பார்க்க

"சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..!" - அருணா ஜெகதீசன்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025'-க்கான `இரும்பு மனுஷி’ விருதை வின்சென்ட் கிருஷ்ணம்மாளுக்கு வழங்கினார், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன். அப்போது பேசிய அவர், ``நான் இதே மேடையில் சில வருடங்களுக்கு... மேலும் பார்க்க

நம்பிக்கை விருதுகள் 2025: சாதனை மனிதர்கள், இளைஞர்களுக்கு மகுடம் சூடும் ஆனந்த விகடன்! | Live

பெருந்தமிழர் விருதுநம்பிக்கை விருதுகளின் உச்ச விருது 'பெருந்தமிழர் விருது'. 2025-ம் ஆண்டிற்கான பெருந்தமிழர் விருதைப் பெறுகிறார் எஸ்.வி.ராஜதுரை. இவரைக் குறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். ... மேலும் பார்க்க

நம்பிக்கை ஆளுமைகளும் அருமை வாசகர்களும் அளவளாவும் சாதனை மேடை!| இன்று நம்பிக்கை விருதுகள் 2025

நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது நமது நூற்றாண்டு நாயகன் ஆனந்த விகடன். இத்தகைய ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழாஇன்று மாலை 4மணி அளவில், சென்னை கலைவாண... மேலும் பார்க்க

நம்பிக்கை விருதுகள் 2025 : நேரில் கண்டு நெகிழ வேண்டுமா? பதிவு செய்யுங்க, அனுமதி இலவசம்!

நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்... மேலும் பார்க்க