செய்திகள் :

"சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..!" - அருணா ஜெகதீசன்

post image

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025'-க்கான `இரும்பு மனுஷி’ விருதை வின்சென்ட் கிருஷ்ணம்மாளுக்கு வழங்கினார், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன்.

அப்போது பேசிய அவர், ``நான் இதே மேடையில் சில வருடங்களுக்கு முன்பு விருது வாங்கியிருக்கிறேன். அப்போது இருந்த மகிழ்ச்சியைவிட கிருஷ்ணம்மாளுக்கு விருது கொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

`இரும்பு மனுஷி’ கிருஷ்ணம்மாள்
`இரும்பு மனுஷி’ கிருஷ்ணம்மாள்

‘சத்தியவான் சாவித்திரி’ கதையைக் கேட்டிருப்போம். இப்போது சாவித்திரியைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நீதிபதிகள் எல்லாவற்றையும் சட்டரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது; மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் ‘சிறை’ படத்தில் இரண்டுவிதமான நீதிபதிகளைக் காட்டுவார்கள். அதில் ரத்தினவேல் பாண்டியன் என்ற கேரக்டர் மனிதாபிமானத்துடன் செயல்படுவார்.

பொதுவாக, ஒரு நீதிபதிபோல் இன்னொருவர் இருக்க மாட்டார். அதனால் கால விரயம் ஏற்படும். ஒவ்வொரு நீதிபதியும் மனிதாபிமானத்துடன் இருந்தால், நீதி விரைவில் கிடைக்கும்’’ என்றார்.

`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்' - நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அலியின் மனைவி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை, 202... மேலும் பார்க்க

நம்பிக்கை விருதுகள் 2025: சாதனை மனிதர்கள், இளைஞர்களுக்கு மகுடம் சூடும் ஆனந்த விகடன்! | Live

பெருந்தமிழர் விருதுநம்பிக்கை விருதுகளின் உச்ச விருது 'பெருந்தமிழர் விருது'. 2025-ம் ஆண்டிற்கான பெருந்தமிழர் விருதைப் பெறுகிறார் எஸ்.வி.ராஜதுரை. இவரைக் குறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். ... மேலும் பார்க்க

நம்பிக்கை ஆளுமைகளும் அருமை வாசகர்களும் அளவளாவும் சாதனை மேடை!| இன்று நம்பிக்கை விருதுகள் 2025

நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது நமது நூற்றாண்டு நாயகன் ஆனந்த விகடன். இத்தகைய ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழாஇன்று மாலை 4மணி அளவில், சென்னை கலைவாண... மேலும் பார்க்க

நம்பிக்கை விருதுகள் 2025 : நேரில் கண்டு நெகிழ வேண்டுமா? பதிவு செய்யுங்க, அனுமதி இலவசம்!

நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்... மேலும் பார்க்க