செய்திகள் :

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

post image

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத கட்சி தேமுதிக. எப்படி கேப்டன் மீது குடிக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகிய உள்ளார் என்று தவறாக விமர்சனத்தை முன் வைத்தார்களோ.. அதேபோல தற்போது என் மீதும், கழகத்தின் மீதும் பேரம், பெட்டி என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

நான் கார் வாங்கியுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?

மக்களுக்காக 100 சதவிகிதம் உழைப்பை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு பின்னால் இருந்தவள் நான் என்பது இந்த ஊர் அறியும்.

தேமுதிக 0.5% வாக்கு வைத்துள்ளது என்கிறீர்கள் பிறகு, ஏன் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்கிறீர்கள்.

அதனை விட்டு விட வேண்டியது தானே. வாழ்த்தினாலும் தேமுதிக தான் விமர்சித்தாலும் தேமுதிக தான் உயர்த்து பிடித்தாலும் தேமுதிக தான்." என்று பேசியிருக்கிறார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் சீட் குறைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு? பதிலளித்த அவர், "ஒரு கூட்டணி வெல்ல சில தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேமுதிக விட்டுக்கொடுக்கும். மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக் கொடுப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் கட்சியில் விசுவாசிகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்கிறது’ - கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது. வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்க... மேலும் பார்க்க

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' - மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட... மேலும் பார்க்க

`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' - தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க