செய்திகள் :

'ஏன் நீங்க நடிக்க வரணும்னு தான் முதல்ல கேட்டேன்.!' - லோகேஷ் கனகராஜ் குறித்து அனிருத்

post image

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’.

கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தில் வாமிகா கேபி நாயகியாக நடித்திருக்க, சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

DC | டிசி
DC | டிசி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளியானப் பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அனிருத் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் லோகேஷ் கனகராஜ் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அனிருத், " லோகேஷும் நானும் பல வருடங்களாக பழகி வருகிறோம்.

தென்னிந்திய ரசிகர்களுக்கு எங்கள் கூட்டணி மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

அதனால் அவர் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று தெரிந்ததும், எனது முதல் ரியாக்ஷன் 'ஏன் நீங்க நடிக்க வரணும்?' என்பதுதான் (சிரித்துக்கொண்டே).

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

ஆனால் இப்போது, குறிப்பாக இயக்குநர் அருணுடன் சேர்ந்து எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

லோகேஷைப் பொறுத்தவரை என்னுடைய வேலையை சுதந்திரமாக செய்ய விடுவார்.

அவரிடமிருந்து கதையைக் கேட்பேன், அவர் எனக்கு கதை சொல்வார். மேலும் அவர் ஷூட் செய்யும்போதெல்லாம் சில காட்சிகளை எனக்குக் காட்டுவார்.

அதைத் தவிர, இசை விஷயத்தில் நாங்கள் பெரிதாக எதுவும் விவாதிப்பதில்லை. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிடுவார்" என்று பேசியிருக்கிறார்.

விஸ்வநாத் & சன்ஸ்: `சூர்யாவின் நடிப்பு Wow; மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது'- கார்த்தி பாராட்டு

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க

DC: "வாமிகா கொடுத்த ஐஃபோன்; லோகேஷ் அண்ணன் கொடுத்த கம்ஃபோர்ட்" - ஜவஹர் சக்தி ஷேரிங்ஸ்!

லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் 'டிசி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் தேவதாஸ் கதாபாத்திரம் மற்றும் அவருடைய குழுவினரைச் சுற்றிதான் முழு படமும் நகரும். இந்தக் ... மேலும் பார்க்க

"Attendance போடணும்னு நினைக்கிற ஆள் நான் இல்ல" - படம் வெளியாகாமல் இருப்பது குறித்து அசோக் செல்வன்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு ‘அன்பில் அவன்’ என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார். அ... மேலும் பார்க்க

Vetri maaran: "அவர் என்னை நடிக்க வச்சது கொஞ்சம் வருத்தம்தான்" - வெற்றி மாறன்

'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் இளன் தற்போது நடிகராகக் களமிறங்குகிறார். அவர் இயக்கி நடித்திருக்கும் 'பியார் பிரேமா கல்யாணம்' படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகிறது.... மேலும் பார்க்க

Anupama : ``அந்த காதலால் மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன்!" - மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்

மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் ... மேலும் பார்க்க

DC: "லோகேஷ் கனகராஜ் அண்ணனை ஏன் அப்படி ட்ரோல் செய்தார்கள் என்றே தெரியவில்லை!" - நடிகர் அவினாஷ் பேட்டி

லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கும் 'டி.சி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தில் தேவதாஸ் டீமில் ஒருவராக நடித்திருக்கும் நடிகர் அவினாஷை சந்தித்துப் பேட்டி கண்டோம். தொடர்ந்து அழுத்தமான கதாபாத... மேலும் பார்க்க