திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப க...
"ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்?
பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய அன்புமணி, " ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்.
சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒருவர்தான் காரணம். இப்போது அதற்காக அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

சேகர்பாபு என்ன பெரிய எக்ஸ்பெர்ட்டா. அவர் ஆளுமை மிக்கவரா? அவருக்கு அந்தத் துறை இந்தத் துறை என்று ஒதுக்கினார்கள். சென்னைக்கு எவ்வளவு செய்திருக்கலாம்.
இதில் சென்னைக்கு மேயர் வேறு இருக்கிறார். சென்னை மேயருக்கு அவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய 4 பெரிய மாநகராட்சிகளில் சென்னையும் ஒன்று.
நான் பல நாடுகளுக்கு போயிருக்கிறேன். லண்டனில் மேயர் பதவி என்பது பிரதமருக்கு நிகரானது. ஆனால் இந்த ஐந்தாண்டு காலத்தில் சென்னை மேயரை எதுவும் செயல்பட விடவில்லை. அன்றைய முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்படி எடுக்காதக் காரணத்தினால் தான் சென்னை க்ளோஸ் ஆகிவிட்டது. சென்னைக்கு நிறைய செய்யலாம். எங்களிடம் நிறைய தீர்வுகள் இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.










