செய்திகள் :

ஒன்றரை மணி கெடு; குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLAக்கள்!-சபாநாயகரின் கோபத்துக்கு காரணம் என்ன?

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் அவை தொடங்கிய 45 நிமிடத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை அழைத்து குண்டுக்கட்டாக வெளியேற்றியிருக்கிறார் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர். சபாநாயகரின் திடீர் கோபத்துக்கு காரணம் என்ன?

வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள்
வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள்

மானியக் கோரிக்கை மீதான கூட்டத்தின் கடைசி நாளில் அவையை சரியாக மதியம் 1:30 மணிக்கு முடித்துவிட வேண்டும். 1:30 மணிக்கு முன்பாக வாக்கெடுப்புக்கு விடப்படும் மானியக்கோரிக்கை தீர்மானங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

இது சட்டப்பேரவை விதி எண் 185.

இதை நேற்று மாலையே சபாநாயகர் குறிப்பிட்டு பேசியிருந்தார். 'வழக்கமாக ஒரு நாளில் ஒரு கட்சிக்கு 2-3 பேர் பேச வாய்ப்பளிக்கப்படும். ஆனால், நாளை கட்சிக்கு ஒருவருக்குதான் பேச வாய்ப்பளிக்கப்படும். உறுப்பினர்கள் அவையை சரியான நேரத்தில் முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.

இந்நிலையில், இன்று காலை அவை தொடங்கியவுடனேயே முதல்வர் பேசியதில் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் விவாதத்தை கிளப்பினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த விவாதம் நீள, முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துவிட்டார்.

உடனே சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் போட அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

ஜே.சி.டி.பிராபகர்
ஜே.சி.டி.பிராபகர்

தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபடவே கோபப்பட்ட சபாநாயகர் உடனடியாக அவைக்காவலர்களை அழைத்து திமுக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினார்.

'நான் எதிர்க்கட்சிகளுக்குதான் அதிக நேரம் பேச அனுமதித்திருக்கிறேன். இன்று விதியை சுட்டிக்காட்டி அவையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் எனும் போது எல்லாம் தெரிந்த அனுபவமிக்க கட்சியினர் அவையை முடக்குவது போல இப்படி செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' என்றார்.

இன்று மதியம் 1:30 மணிக்கு அவை முடிந்தவுடன் உரிமைக் குழு, பொதுக் கணக்கு குழு போன்ற முக்கியமான குழுக்களின் உறுப்பினர்களை சபாநாயகர் அறிவிப்பார்.

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?அவைக் காவலர்கள்அவை எப்போதுமே சுமூகம... மேலும் பார்க்க

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன்,... மேலும் பார்க்க