செய்திகள் :

"ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" - திமுகவில் இணைந்த தேமுதிகவை விமர்சித்த பாஜக

post image

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.

தேமுதிக, திமுகவில் இணையுமா? அதிமுகவில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

திமுகவில் இணைந்த தேமுதிக
திமுகவில் இணைந்த தேமுதிக

இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இன்று (பிப்.19) அதிகாரப்பூர்வமாக இணைந்ததை பாஜக விமர்சித்திருக்கிறது.

பாஜக வெளியிட்டிருக்கும் பதிவில், "தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள்.

அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக.

அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" என்று விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறது.

"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" - ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மண்டல, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்தாய்வு கூட... மேலும் பார்க்க

இரான் மீது எப்போது தாக்குதல்? - ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல்... மேலும் பார்க்க

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' - திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியா... மேலும் பார்க்க

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! - தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் இன்றைய ஹாட் நியூஸ் ஆக உள்ளது.தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரு துருவங்கள் கோலோச்சிய காலத்தில... மேலும் பார்க்க

கோவை உடன்பிறப்புகள் vs கரூர் கம்பெனி; திமுகவில் வெடித்த மோதல்; செந்தில் பாலாஜி திட்டத்தில் டிவிஸ்ட்!

சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை தக்க வைத்து, ஏழாவது முறை அரியணை ஏறுவதற்கு திமுக காய் நகர்த்தி வருகிறது. கடந்த காலங்களில் கோட்டை வ... மேலும் பார்க்க

விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை... பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான அனுமதி கோரி, த.வெ.க நிர்வாகிகள்... மேலும் பார்க்க