செய்திகள் :

``ஒரு நடிகராக சக நடிகருக்குச் சொல்கிறேன்.! " - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ

post image

கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள ‘கர்நாடகா வித்யாவர்தகா சங்க’ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ‘மனுஷ்யத்வதெடகே சமுதாயா’ சார்பில் சமூக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜை முற்றுகையிட முயன்ற சில இந்துத்துவ அமைப்பினர் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. `நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்துக்களுக்கு எதிராகப் பேசுவார்' எனக் குற்றம் சாட்டிய எதிர்ப்பாளர்கள், அரங்கத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும் அங்கிருந்த பிரகாஷ் ராஜின் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மீது சிலர் மையை ஊற்றி, அதைச் சேதப்படுத்தினர்.

அரங்கின் நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதை அடுத்து, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராட்டக்காரர்களைப் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், "சமூக மற்றும் நாட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்த அரங்கம் ஒரு நல்ல வாய்ப்பை அளித்தது. மூத்த நீதிபதிகள் பலரும் கலந்து கொண்ட இத்தகைய பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று கூறுபவர்கள் முதலில் தங்களின் அறியாமையை உணர வேண்டும். என்னை இந்து எதிர்ப்புவாதி என்று முத்திரை குத்துவதைத் தவிர அவர்களிடம் வேறு வழியில்லை. ஆனால், நான் உலகத்தின் எந்த மூலையிலும் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல" எனத் தெரிவித்திருந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்த நிலையில் அவர் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தார்வாடில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் இளைஞர்களின் பிரச்னைகள் மற்றும் சமூகத்தில் கலையின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் தற்போதைய சூழல் குறித்து நாம் பேசுவதையோ, கேள்விகள் கேட்பதையோ பா.ஜ.க விரும்பவில்லை. என்னைப்போன்றவர்களை மிரட்டுவதற்காகச் சுவரொட்டிகள் மீது மை வீசுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். கேள்விகள் கேட்கும் நேஹா போரா, அபிஜித் தீப்கே போன்றவர்கள் மீதும், என் மீதும் மை வீசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

‘மையை வைத்துப் படியுங்கள், எழுதுங்கள்; அதை மனிதர்கள் மீது வீசி வீணடிக்காதீர்கள்’ என்று நேஹா போரா கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நடிகராக சக நடிகருக்கு சொல்கிறேன். சினிமாவில் ரவுடிகளைப் பயன்படுத்துவது, தடிஅடி நடத்துவது, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகளில் நடித்தால் பெயரும், பணமும், வேலையும் கிடைக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழும் குரல்களை ஒடுக்க நினைப்பது சட்டவிரோதமானது.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் வன்முறையைக் கையாள்பவர்களைச் சமூகம் கோழைகள் என்றும் குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் என்றுமே கருதும். இதுபோன்ற மிரட்டல்கள் உங்களுக்குத்தான் அவப்பெயரைத் தரும். ஒரு பெருமைமிக்க நடிகனாக, சிந்தனைவாதியாகச் சொல்கிறேன், இனிமேலாவது இதுபோன்ற மலிவான செயல்களை நிறுத்துங்கள். தடை எதுவந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என் உரைகளும், கேள்விகளும் தொடரும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். என்று அவர் உறுதியளித்துள்ளார்.

காதலியின் 3,400 முத்தங்களால் விபரீதம்: வைரலான வீடியோ; காரைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்வார். இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காக, தனது சுவிஃப்ட் காரை வித்தியாசமான முறையில் மாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருடைய பெண் தோழி ஒருவர் ச... மேலும் பார்க்க

``அமைச்சர் குறைந்தபட்சம் என்னிடம் விவரமாவது கேட்டிருக்கலாம்.!" - வன்னிஅரசு குறித்து அயலக மாணவர்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க

Vishal Garg அன்று 3 நிமிடத்தில் 900 பேரை பணியிலிருந்து நீக்கியவர்; இன்று அவரையே வெளியேற்றிய நிறுவனம்

டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Fi... மேலும் பார்க்க

"மோனலிசாவுடன் ஒப்பிடாதீர்கள்; நான் சிங்கப்பெண்" - கன்வார் யாத்திரையில் வைரலாகி வரும் மானசி

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசிமணி, உத்திராட்ச மாலைகளை விற்பனை செய்து வந்த மோனலிசா என்ற பெண் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அவரது வீடியோக்கள் மிகவும்... மேலும் பார்க்க

வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதி: பிட்புல் நாய் தாக்கியதில் தம்பதிக்கு தீவிர சிகிச்சை!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகர் பகுதியில் பிட்புல் (Pitbull) ரக நாய் தாக்கியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சிய... மேலும் பார்க்க

``மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன்; இப்போது துன்புறுத்தப்படுகிறேன்" - வைரல் பெண் ரியா அஹிர்

நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழி... மேலும் பார்க்க