செய்திகள் :

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

post image

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனந்தசேகர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை சரித்திரப் பதிவேடு பட்டியலில் சேர்த்து அவரது நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு, அவர் வசிக்கும் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த சேகர்

அதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமிகள் அழுது கொண்டே தங்கள் பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். இது குறித்து அக்குழந்தைகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஆனந்தசேகரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுரேஷ்குமார், ’இது சமூகத்தில் நடைபெறும் அரிதினும் அரிதான வழக்கு’ எனச் சுட்டிக்காட்டினார்.

அவரது தீர்ப்பில், “மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்தசேகருக்கு எந்த விதமான அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. குற்றவாளியின் இந்தச் செயல் உச்சகட்ட கொடூர புத்தியை வெளிக்காட்டுகிறது. குடிபோதையில் செய்த தவறு என்பதை ஏற்க முடியாது. இது போன்ற தவறில் கருணை காட்டுவது போக்சோ சட்டத்தின் நோக்கத்தினை சிதைத்து விடும்.

நெல்லை நீதிமன்ற வளாகம்

அத்துடன், குற்றவியல் நீதி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்” எனக் குறிப்பிட்டதுடன், தூக்கு தண்டனை விதித்தார். இதில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.56 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ... மேலும் பார்க்க

``முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ... மேலும் பார்க்க

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் - நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர் தான் தங்கி இருந்த மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தச் சோகமான விபத்துக்குப் பிறகு கடந்த ... மேலும் பார்க்க

மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவைஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயதுமாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதிகோவைவிமான நிலைத்தின்... மேலும் பார்க்க

'வீட்டில் சிலுவை இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவராகிவிட்டார் என அர்த்தமாகாது'- மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவை சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மாணவர... மேலும் பார்க்க