செய்திகள் :

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி

post image

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். பல்லவன் சாலை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய ஒருவர், மாணவியின் அருகில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் பேருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

அதை மாணவி கண்டித்தார். அதோடு மாணவி அந்த இருக்கையிலிருந்து எழுந்து வேறு இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அந்த நபரோ மாணவியின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் பக்கத்திலேயே அமர வைத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டிருக்கிறார். அதைக்கேட்ட சக பயணிகளும் கண்டக்டர், மாணவியிடம் என்னவென்று விசாரித்திருக்கிறார்கள்.

ராமு

உடனே மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கூற, அருகில் இருந்த நபரோ தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிறுத்தினார். பின்னர், சக பயணிகளின் உதவியோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை மாணவி, போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் மாணவி, தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்க, பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராமு (38) என்றும் மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து ராமு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், ``ஓடும் பேருந்தில் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞருடன் துணிச்சலுடன் போராடியதோடு அவரை எங்களிடம் ஒப்படைத்தார் அந்த மாணவி. இதைப் போல ஒவ்வொருவரும் செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் குறையும்" என்றனர்.

'பங்குகள் வாங்கும்போதும், விற்கும்போதும்' - SEBI பெயரில் புது மோசடி; அலர்ட் ஆகுங்க மக்களே!

'பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்' என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி. நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..."செபியின் லெட்டர்பேடைப் ப... மேலும் பார்க்க

2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை; சிக்கிய திமுக நிர்வாகி - நயினார் நாகேந்திரனின் கண்டனம்

கிருஷ்ணகிரியில் 2 வயது பெண் குழந்தையை திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியு... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமு... மேலும் பார்க்க

கும்பகோணம்: ”சார் நீங்க பேட் டச் செய்றீங்க"- கொதித்த மாணவிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் கருப்பூரைச் சேர்ந்த ராஜமனோகர் (55) என்பவர் 10-ம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மாணவிகளுக்குப் பாலியல் ... மேலும் பார்க்க

சென்னை: `நம்ம வீடியோக்களை காட்டிவிடுவேன்' - தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 850 கிராம் நகை, பணம் பறிப்பு

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பெண், தன்னுடைய கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் தொழிலதிபராக உள்ளார். அதே அடுக்கு... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் தற்போது 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள தார் மாவட்டத்தில் இருக்கும் பிதாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி 10வது பொதுத்தேர்வு எழு... மேலும் பார்க்க