செய்திகள் :

'ஓமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதியை திருமணம் செய்தது செல்லாது!' - ஜமாத் தலைவர் சொல்வது என்ன?

post image

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் பத்திரிகையாளர் நிதி ராஜ்தான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஓமர் அப்துல்லாவிற்கு சுப்ரீம் கோர்ட் விவாகரத்து வழங்கியதை தொடர்ந்து இத்திருமணத்தை அறிவித்துள்ளார்.

முதலில் ஓமர் அப்துல்லா திருமணம் செய்த பெண் இஸ்லாமியர் கிடையாது. இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கும் நிதி ராஜ்தானும் முஸ்லிம் கிடையாது. இதனால் இத்திருமணம் மத சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் மௌலானா முஃப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி அளித்த பேட்டியில், `இஸ்லாமிய கொள்கைகளின்படி ஓமர் அப்துல்லாவின் திருமணம் சட்டவிரோதமானது' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பரேல்வி மேலும் கூறுகையில், ''ஷரியாவின் கீழ் ஒரு திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க இரு நபர்களும் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதால் இஸ்லாமிய கொள்கைகப்படி இருவருவரது திருமணம் செல்லுபடியாகாது.

இருவரில் ஒருவர் முஸ்லீம் இல்லை என்றால், திருமணத்தை சட்டப்பூர்வமாக கருத முடியாது. இந்த விஷயத்தில் நிதி ராஜ்தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை ஓமர் அப்துல்லா உறுதி செய்திருக்க வேண்டும்.

அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தால் மற்றும் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டால், ஷரியாவின் கீழ் திருமணம் அனுமதிக்கப்பட்டதாக கருதப்படலாம்'' என்று அவர் கூறினார்.

ஒமர் அப்துல்லா இதற்கு முன்பு பாயல் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுப்ரீம் கோர்ட் வரை சென்று விவாகரத்து செய்து கொண்டனர். 56 வயதாகும் ஓமர் அப்துல்லா தற்போது பெண் பத்திரிகையாளர் நிதி ராஜ்தானை (49) இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

We're Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விமானி பதற்றத... மேலும் பார்க்க

`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியிலிருந்து குதித்த பெண்

புனே அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த ஏக்தா பங்காட் என்ற பெண், பல வருடங்களாக முதுகுத் தண்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார். அ... மேலும் பார்க்க

48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!

தினமும் கோக்... கோடிகளில் முதலீடு: வாரன் பஃபெட்டின் விசித்திரப் பழக்கம்!பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரும் உலகின் தலைசிறந்த முதலீட்டாளருமான வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிப்பதில்ல... மேலும் பார்க்க

40 ரிசார்ட், வில்லாக்கள்... பதவியைப் பயன்படுத்தி முறைகேடு; சிக்கிய ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் சிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷகா மாதூர். இவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ராஜஸ்தானின் ப... மேலும் பார்க்க

மரணத்தையும் கொண்டாடும் மெக்சிகோ: ‘Day of the Dead’! - இறந்தவர்களை வரவேற்கும் திருவிழா!

மரணம் என்றாலே துக்கம் மட்டும்தானா? மறைந்தவர்களை நினைத்து மகிழவும் முடியுமா? இதற்கான பதில்தான் மெக்சிகோவின் ‘Day of the Dead’ திருவிழா.ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் இத்திரு... மேலும் பார்க்க

`₹114 தினக்கூலி பெற்ற பெண்ணிடம், ₹1,80,692 கோடி சொத்து' - ஐபோனால் சீனாவின் பணக்காரப் பெண்மணி ஆன கதை!

ஒரு காலத்தில் தொழிற்சாலையில் எளிய ஊழியராகப் பணியாற்றி, பள்ளிக் கல்வியை பாதியிலேயே கைவிட்ட சூ குன்ஃபேய் (Zhou Qunfei) என்ற பெண்மணி, இன்று விடாமுயற்சியால் சீனாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக மீண்ட... மேலும் பார்க்க