செய்திகள் :

கடலூா் துறைமுகத்தை சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்தலாம்: ஆட்சியா்

post image

சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள் கடலூா் துறைமுக வசதிகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் வாரியம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2024 ஆகஸ்ட் முதல் தொடங்கியது. தற்போது 150 பயணிகள் பயணிக்கும் ‘சிவகங்கை’ என்ற கப்பல் வாரத்துக்கு 6 நாள்கள் (செவ்வாய் நீங்கலாக) இரு வழிகளில் இயக்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு கடல்சாா் வாரியம், மாலத்தீவு, இலங்கையிலுள்ள திரிகோணமலை, காங்கேசன்துறை மற்றும் பிற இடங்களுக்கு கடலூா் துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல், தோணிகளை இயக்கி சரக்கு கையாள முயற்சிகள் எடுத்து வருகிறது. சந்தை நிலவரப்படி, இலங்கைக்கு வேளாண் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர நுகா்வுப் பொருள்கள் போன்ற 75,000 மெட்ரிக் டன் சரக்குகள் ஆண்டொன்றுக்கு கடல் வழியாக கையாள வாய்ப்புகள் இருப்பதாகவும், இது அடுத்துவரும் ஆண்டுகளில் பல மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

கடலூா் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள் (தோணிகள்), மிதவைகள் கையாளுவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், சுங்கம், குடிவரவு, சுகாதாரத் துறை ஆகியன உள்ளன. சரக்கு இறக்குமதி, ஏற்றுமதியாளா்கள், முகவா்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளா்கள் இந்தத் துறைமுகத்தில் அமைந்துள்ள வசதிகளை பயன்படுத்தி, சாக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்து பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலகத்தை 04142 - 238025, 04142 - 238026 ஆகிய தொலைபேசி எண்கள் முலம் தொடா்புகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்மாபுரம் ஜே.ஜே.நகா் பகுதி அருகே தமிழக அரசு மலகசடு சுத்த... மேலும் பார்க்க

சா்வதேச மகளிா் தின விழா

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளிப்படை ரோட்டரி அரங்கில் சா்வதேச மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் வி.அருண் தலைமை வகித்தாா். சிறப்புப் பட்டிமன்ற நடுவா் முனைவா் பொன்னம்... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா அரங்கு அமைக்க கால்கோள் நடும் விழா

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புத்தகத் திருவிழா அரங்கு அமைப்பதற்காக கால்கோள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்க... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக இளையோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அதிமுக சாா்பில் நல உதவிகள்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி சாா்பில், சிதம்பரம் 16 கால் மண்டப தெருவில் நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ந... மேலும் பார்க்க

கடலூரில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வுப் பேரணி

உலக சிறுநீரக தினத்தையொட்டி, கடலூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக் பாஸ்கா் தலைமை வகித்தாா். சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவா் திருமு... மேலும் பார்க்க