செய்திகள் :

`கட்டடத்தை இடிக்க போறோம், வேற ஸ்கூல் பாருங்க' - திடீரென தெரிவித்த பள்ளி நிர்வாகம்! போராடும் பெற்றோர்

post image

சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கிறது நிர்வாகம்.

அதன்படி இன்று காலை பள்ளிக்குச் சென்ற அவர்களிடம், `நாங்கள் பள்ளிக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே உங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்களாம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், `முழு ஆண்டு பரிட்சை எழுத இருக்கிற இந்த நேரத்தில் என்ன இப்படிச் சொல்கிறீர்கள்' எனக் கேட்டிருக்கிறார்கள்.

குமார ராணி மீனா முத்தையா பள்ளி

ஆனால் நிர்வாகம் முதலில் சொன்ன அதையே திரும்பவும் சொல்லிவிட்டு நிர்வாகத்தின் முடிவு எனச் சொல்லி விட்டார்ர்களாம்.

வேறு வழியில்லாமல் பெற்றோர்கள் தற்போது பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளித் தரப்பை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது,

’நான் இங்க புதுசா சேர்ந்திருக்கிற ஆசிரியை. எனக்கு இந்த விவகாரம் முழுசா தெரியல. மேனேஜ்மென்ட் முடிவுனு சொல்றாங்க. நீங்க வைஸ் பிரின்சிபல் கிட்டப் பேசுங்க’ என இன்னொருவரிடம் போனைக் கொடுத்தார் எதிர்முனையில் பேசியவரோ, ’இது பத்தி இப்ப எதுவும் பேச முடியாதுங்க. பெற்றோர்கிட்ட நாங்க பேசிட்டிருக்கோம்’ என முடித்துக் கொண்டார்.

போராடும் பெற்றோர்

பெயர் குறிப்பிட விரும்பாத பள்ளியுடன் தொடர்புடைய ஒருவர் நம்மிடம் பேசிய போது, ‘பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இந்தக் கட்டடத்தில் பள்ளி இயங்கத் தடை போட்டதா தெரியவருது. அதேநேரம் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாதுகாப்பான மற்ற சில பிளாக்ல அனுமதிக்கப் படலாம்னு சொல்றாங்க’ என்றார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பெற்றோர் ஒருவரிடம் நாம் கேட்ட போது, ‘கட்டடம் தரம் இல்லாததா இருந்தா அதை எப்ப ஆய்வு செய்யணும். கல்வி ஆண்டின் தொடக்கத்துல பார்த்திருக்க வேண்டாமா? கட்டணம் கட்ட தாமதாமா அவ்வளவு கடுமை காட்டுறவங்க இந்த விஷயத்துல கவனமா இருக்க வேண்டாமா? அதேபோல இப்ப 9 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் மட்டும் படிக்கலாம்னா அவங்க பாதுக்காப்பு குறித்து பெற்றோருக்கு அச்சம் வராதா’ என ஆவேசமாகக் கூறுகிறார்.

தேர்வு நேரம் என்பதால் எந்த பள்ளி இந்த மாணவர்களைச் சேர்க்கும் என்பதும் தெரியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு நல்ல தீர்வை காண எடுக்க முன்வர வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

PMIST: `ஆயிரம் கனவுகளின் விமானம்' - இந்தியா, ஆசியா புத்தக சாதனை நிகழ்வு!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து `ஆயிரம் கனவுகளின் விமானம்' என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்... மேலும் பார்க்க

நெல்லை: பொருநை 9வது புத்தகத் திருவிழா தொடக்கம்; லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு | Photo Album

பொருநை நெல்லை 9-வது புத்தகத் திருவிழா தொடக்கம்.! லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு.!`படம் தொடங்கினப்ப கருணாநிதி படத்துலயே இல்ல!' - ‘பராசக்தி தடை’ புத்தகம் சொல்வது என்ன? மேலும் பார்க்க

`இதையெல்லாம் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருந்தால்...'- TNPSC நிர்வாகக் குளறுபடி குறித்து கல்வியாளர்!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்க... மேலும் பார்க்க

நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! - அசத்தும் அரசு பள்ளி மாணவி

தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் புளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், மாணவி பிரேமா. தோட்ட தொழிலாளர்களான பரமேஸ்வரி - கணேஷ் மூர்த்தி தம்பதியரின் மகளான இவர், தொடக்க கல்வி முதலே படிப்ப... மேலும் பார்க்க

தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இ... மேலும் பார்க்க

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது.விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:``உலகிலேயே முதல் முதலாக நடிகர் ஒருவர் அரசியல் தலைவராகி மக்களின் ஆத... மேலும் பார்க்க