செய்திகள் :

கராத்தே பாபு: "ரவி மோகன் சாருடன் பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று"- நெகிழ்ந்த இயக்குநர்

post image

கணேஷ் கே பாபு இயக்​கத்​தில், ரவி மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கராத்தே பாபு'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​திருக்கிறார்.

அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு முன்​னாள் காவல்துறை தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கராத்தே பாபு
கராத்தே பாபு

இந்நிலையில் ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றியது குறித்து இயக்குநர் கணேஷ் கே பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "சில கனவுகள் நம்மை வந்தடைய பல வருடங்கள் ஆகும். அப்படியான கனவு ஒன்றை நான் நனவாக்கியுள்ளேன்.

ரவி மோகன் சாருடன் இணைந்து பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அவருடன் திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தைப் பகிர்வது ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றியது. இன்று 'கராத்தே பாபு' திரைப்படத்தில் தனது பயணத்தை அவர் நிறைவு செய்யும் வேளையில், என்னிடம் நன்றியைத் தவிர சொல்ல வேறு ஏதுமில்லை.

அனைவரும் கொண்டாடும் நடிகர் என்பதைத் தாண்டி, அவரை ஒரு மனிதனாக அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது ஒழுக்கம், அடக்கம், பெருந்தன்மை மற்றும் ஒவ்வொரு காட்சியையும் அவர் அணுகும் முறை ஆகியவை எந்தத் திரைப்படக் கல்லூரியும் கற்றுக்கொடுக்க முடியாத பாடங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தன.

கராத்தே பாபு
கராத்தே பாபு

ஒவ்வொரு உரையாடலும், ஒவ்வொரு காட்சியும், படப்பிடிப்புத் தளத்தில் கழித்த ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. இந்தப் பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு நடிகர் மீதான எனது ஈர்ப்பு அதைவிட மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக மாறியது.

எனக்கு ஒரு மூத்த சகோதரர் கிடைத்தார். 'கராத்தே பாபு' மீது நம்பிக்கை வைத்து, இப்படத்திற்காக உங்கள் இதயத்தை உருகி, உழைத்து, இந்தப் பயணத்தை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றியமைக்கு நன்றி ரவி மோகன் சார். இந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க