செய்திகள் :

கருவிலேயே சிசுவுக்கு அறுவை சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவர்களின் வரலாற்றுச் சாதனை!

post image

இந்திய மருத்துவ வரலாற்றில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாயின் கருப்பைக்குள் 25 வாரக் கருவாக இருந்த சிசுவுக்கு, கடுமையான முதுகுத் தண்டுவடக் குறைபாட்டைச் சரிசெய்யும் ஆறு மணி நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கருவிலேயே சிசுவுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அறுவை சிகிச்சை இதுவாகும்.

மைலோமெனிங்கோசீல் பாதிப்பு

சிசுவுக்கு 'மைலோமெனிங்கோசீல்' என்ற பாதிப்பு இருந்தது. இது 'ஸ்பைனா பைஃபிடா' எனப்படும் முதுகுத் தண்டுவடப் பிறவிக் குறைபாட்டின் மிகக் கடுமையான வகையாகும். கரு வளர்ச்சியின்போது முதுகெலும்பு முழுமையாக மூடப்படாமல் போவதால், முதுகுத் தண்டுவடமும் நரம்புகளும் வெளியே துருத்திக்கொள்ளும். இதனால் கால்களை அசைப்பதில் சிரமம், நடக்க முடியாத நிலை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும்.

கருவிலேயே செய்யப்படும் சிகிச்சை

பொதுவாக இதுபோன்ற குறைபாடுகளுக்குக் குழந்தை பிறந்த பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், கருவிலேயே சிகிச்சை அளிக்கும்போது நரம்புகள் தொடர்ந்து சேதமடைவது தடுக்கப்படுகிறது. இதனால் பிற்காலத்தில் மூளையில் நீர் தேங்கும் அபாயம் குறைகிறது. எனினும், இதன் முழுமையான பலன் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே அமையும்.

ஆறு மணி நேர எய்ம்ஸ் அறுவை சிகிச்சை

நவம்பர் 12-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை மையத்தில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் குப்தா தலைமையில், மகப்பேறு மற்றும் தாய்-சிசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழு இதில் பங்கேற்றது. தாயின் கருப்பை திறக்கப்பட்டு, கருவின் முதுகுப் பகுதியில் இருந்த குறைபாடு கவனமாகச் சரிசெய்யப்பட்டது.

ஆபத்துகளும் மருத்துவக் கண்காணிப்பும்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயும் சிசுவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தாயின் கருப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதுடன், எதிர்காலப் பிரசவங்களிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

அரசு மருத்துவமனையின் சாதனை

உலகில் சில சிறப்பு மருத்துவ மையங்களில் மட்டுமே இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் அதுவும் எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் இது இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. வசதியற்ற குடும்பங்களுக்கும் இத்தகைய அதிநவீன சிகிச்சைகள் கிடைக்க இந்த முயற்சி ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளது.

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதா?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்கிறார். அது தவிர, ஒருநாள் விட்டு ஒருநாள் பூண்டும் சாப்பிடுகிறார். இவை இரண்டையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், ஹார்ட் அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்கள், அவசியம் தவிர்க்க வேண்டிய '3' விஷயங்கள்!

Doctor Vikatan: சொரியாசிஸ் பாதிப்புக்கும் உணவுகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா...குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டால், சொரியாசிஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாகுமா... தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஏதேனும் உள்ள... மேலும் பார்க்க

Doctor Vikatan: கான்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிவிட்டால், அது கண்களுக்குள் புதைந்துவிடுமா?

Doctor Vikatan:நான் கடந்த சில வருடங்களாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறேன். சில நாள்களில் லென்ஸை கழற்றவே மறந்துவிடுகிறேன். திடீரென நினைவு வந்து அகற்றுவேன். இப்படி ஒருவேளை லென்ஸை அகற்ற மறந்துவிட்டால்... மேலும் பார்க்க

சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை: CII 6-வது தமிழ்நாடு மெட்கிளேவ் 2026-ல் இரு உயரிய விருதுகள்!

இலாப நோக்கமில்லாத புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையான சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (Sringeri Sharada Equitas Hospital), CII தென்னகப் பிரிவு (CII Southern Region) நடத்திய 6-வது ‘CII தமிழ்நாடு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி... கர்ப்ப்பை இல்லாத ஆண்களுக்கும் அவசியம்!

Doctor Vikatan: இதுநாள் வரைHPV தடுப்பூசி என்பது பெண்களுக்குப் போடப்பட வேண்டியது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதை ஆண்களுக்கும் போட வேண்டும் என்கிறாள் என் தோழி... அது உண்மையா... காரணம் என்ன...... மேலும் பார்க்க

தாளவாடி சாணியடி திருவிழா: பாரம்பர்ய நம்பிக்கையும்... மருத்துவர்களின் எச்சரிக்கையும்!

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள கும்டாபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் ப... மேலும் பார்க்க