செய்திகள் :

'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' - பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்

post image

கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர் அவதரித்த ஊர் என்பதால் இங்கு கருவூராருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த திருத்தலம் என்பதால், இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதோடு, தமிழகத்தில் உள்ள 2000 ஆண்டுகால பழமையான ஆலயங்களில் ஒன்றான இத்திருத்தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் என்பதும் இந்த கோயில் சம்மந்தப்பட்ட சிறப்பாகும். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 30 நாட்களாக ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கும் அவர்கள் வருகை தந்தனர், குறிப்பாக, கருவூரார் சித்தர் சன்னிதியை பார்ப்பதற்காகவே வருகை தந்து சித்தர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் உள்ள அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 20 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர்.

japan paktharkal

அதன்பிறகு, கோயிலின் முன்புற கோபுரம் முன்பு குழுவாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோபால் பிள்ளை சுப்பிரமணியம் குழுவினர் சார்பில் அழைத்து வரப்பட்ட இவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு ஆன்மிக தலங்களை தரிசித்து வருவதாக கூறினர். மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் திருக்கோயில் மற்றும் குளித்தலை கடம்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட்டு தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கரூரில் பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலுக்கு ஜப்பான் நாட்டில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை பார்த்து, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

`பசில வந்த பிள்ளைக.!' - தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்... நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5

வண்டிமலையான்ஆங்காரிகளின் கதை 05நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்... மேலும் பார்க்க

`ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' ஆணவக்கொலை செய்யப்பட்ட பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை 4

பூச்சியம்மனின் கதைஆங்காரிகளின் கதை 4“ வலுத்திலுத்தும் தங்கையவள் வர மாட்டேனென்றதினால் கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம். வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…” - பூச்சியம்மன் வில்லுப... மேலும் பார்க்க

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டி... மேலும் பார்க்க

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? மேலும் பார்க்க

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார்... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்

தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை... மேலும் பார்க்க