செய்திகள் :

கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

post image

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவேணி மற்றும் 16 வயது மகள்கள் துர்கா, புனிதா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பணிக்குச் சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

தர்ணா

இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது, ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரத்தக்காயங்களுடன் அவர் மர்மமான முறையில் சடலமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தோகைமலை காவல் நிலைய போலீஸார் பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், 'அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

இதையடுத்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டி.எஸ்.பி ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் தொடர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை ... மேலும் பார்க்க

சென்னை: கை, கால்கள் கட்டி, வாயில் துணி அடைத்து இளைஞர் கொலை - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூரம்

காஞ்சிபுரம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகன் அருண்குமார் (39). இவர் செம்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்ப... மேலும் பார்க்க

தருமபுரி: நகைக்காக மாமியாரைக் கொன்று குவாரி குட்டையில் வீசிய திமுக நிர்வாகி; நண்பர்களுடன் கைது

நகைக்காக மாமியாரைக் கொலை செய்து சடலத்தை குவாரி குட்டையில் வீசிய சம்பவத்தில் திமுக ஒன்றிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சேலம்:சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் க... மேலும் பார்க்க

பெண்களுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கிய இளைஞர் - போக்ஸோ வழக்கில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ​மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, பாளையங்கெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ் (25). இவர் சொந்தமாக ஒலி, ஒளி சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒ... மேலும் பார்க்க