"இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா என யோசிக்கிறேன்" - மிஷ்கின் சொல்லும் ...
கரூர்: 5 பேர் தற்கொலை விவகாரம்... விவாகரத்து பிரச்னை - அதிர்ச்சி சம்பவத்தின் உருக்கமான பின்னணி
கரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள வாங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் கண்ணன். இவரது தந்தை ராமசாமி (63), தாய் ஜானகி (60), சகோதரி சுகுணா ( 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, சிவானி (10), ஆதிரன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கரூர் வேலாயுதம்பாளையத்தில் வசித்து வந்த பிரபு மற்றும் சுகுணா இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் பிரபு நீதிமன்றம் சென்று விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த நவம்பர் 7 - ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக வாங்கப்பாளையத்தில் உள்ள தி.மு.க பிரமுகர் கண்ணன் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்த சகோதரி சுகுணா குடும்பப் பிரச்னை குறித்து மனவிரக்தியில் இருந்துள்ளார் .

இது குறித்து தந்தை ராமசாமி மற்றும் தாய் ஜானகி ஆகியோரிடம் குடும்பத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை கூறி அழுது புலம்பி உள்ளார். இதனால், அவரது பெற்றோருக்கும் மன உளைச்சல் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், கரூர் வாங்கப்பாளையத்தில் இருந்து காரில் ராமசாமி மற்றும் ஜானகி சுகுணா மற்றும் குழந்தைகள் இருவர் என 5 பேர் வாங்கல் அருகே உள்ள சின்ன காளிபாளையம் தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணி அளவில் சின்ன காளிபாளையம் ராமசாமி தோட்டத்திற்கு பக்கத்து தோட்டக்காரரான கருப்பண்ணன் என்பவர், தோட்டத்தில் கார் நின்றிருப்பதைக் கண்டு, கிணறு அருகே சென்று பார்த்த பொழுது, ராமசாமி, ஜானகி, சுகுணா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என 5 பேரும் உயிரிழந்த நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர். இதனை பக்கத்து தோட்டக்காரர் கருப்பண்ணன் என்பவர் பார்த்து உடனடியாக வாங்கல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடைபெற்றது.
மேலும், ராமசாமியும், பேத்தி சிவானியும் வயிற்று பகுதிகளில் துணியால் கட்டிக்கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். அதேபோல, சுகுணாவும், மகன் ஆதினும் ஒரே துணியால் வயிற்றுப் பகுதிகளில் கட்டிக்கொண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் 5 பேரும் ஒருவரை ஒருவர் துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் உயிரிழந்த ராமசாமியின் மகன் கண்ணன் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்று கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ராமசாமி தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தில் இந்த தற்கொலை முடிவுக்கு தாங்கள் மட்டுமே காரணம், வேறு யாரும் காரணம் இல்லை. நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்து உள்ளோம்' என உருக்கமாக கடிதத்தில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















