செய்திகள் :

கர்நாடகா: முகாமில் திடீரென மோதிக்கொண்ட யானைகள்; இடையே சிக்கிய சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

post image

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சென்னையைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா துபாரே யானைகள் முகாமைச் சேர்ந்த இரண்டு யானைகள் காவிரியாற்றில் குளித்துக்கொண்டிருந்தன.

குடகு யானைகள் சண்டை
குடகு யானைகள் சண்டை

'கஞ்சன்' மற்றும் 'மார்த்தாண்டா' அஆகிய இரண்டு யானைகள் குளித்துக்கொண்டிருப்பதைச் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜின்மு என்கிற 33 வயதுப் பெண்ணொருவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

திடீரெனக் குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் அங்கே திடீரெனப் பரபரப்பு நிலவியது. யானைப்பாகனும் யானையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது.

கஞ்சன் என்கிற யானை மார்த்தண்டா யானையை வலுவாக மோதியது. இதனால் மார்த்தண்டா யானை கீழே விழுந்தது. இதன் அருகில் நின்றுகொண்டிருந்த ஜின்மு என்பவர் யானையின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

குடகு யானைகள் சண்டை
குடகு யானைகள் சண்டை

இது தொடர்பான விரிவான விசாரணைக்குக் கர்நாடக வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் துறை மந்திரி ஈஸ்வர் கந்த்ரே உத்தரவிட்டிருக்கிறார்.

இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைப் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' - முதியவரின் விநோத செயல்

சிலர் தங்களது மரணத்திற்கு முன்பே தங்களது கல்லறை எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தங்களது கல்லறையை தாங்கள் உயிரோடு இருக்கும்போதே கட்டி வைத்துவிடுவர். ஆனால் மத்திய ... மேலும் பார்க்க

`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சமீப காலமாக கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த மனீஷ் குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள சைதாமா எ... மேலும் பார்க்க

18 வருட உழைப்பு, ஜப்பானில் பிறந்த குழந்தைகள்... கலங்கும் இந்தியர்! - அரசின் புதிய விதிகளால் சிக்கல்!

பிசினஸ் மேனேஜர்’ விசாஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வந்த மனிஷ் குமார் என்பவரின் வாழ்க்கை, ஒரே ஒரு அரசு உத்தரவால் தலைகீழாக மாறியிருக்கிறது.தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா புதுப்பிப... மேலும் பார்க்க

H-1B விசா போர்: இந்தியத் திறமையையும் வழிபாட்டு முறையையும் குறிவைக்கிறதா அமெரிக்கா?

ஹைதராபாத்தின் ஒரு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கால்களில் வேகம் இல்லை, ஆனால் கண்களில் ஒரு மாபெரும் 'அமெரிக்கக் கனவு' இர... மேலும் பார்க்க

தொழிலதிபர் அதானி மீதான வழக்கை கைவிட அமெரிக்கா முடிவு!

தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் எழுந்தது. இரண்டு பேரும் இந்தியாவில் சோலார் மின் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்... மேலும் பார்க்க

`ஒரே ஒரு முகநூல் பதிவுக்கு, ரூ.50 லட்சம் செலவு?' - ஒருவழியாக விமானம் ஏறிய இந்திய வம்சாவளி மருத்துவர்

பாஜக-வுக்கு எதிரான ஒரு முகநூல் பதிவிட்டதற்காகப் பதியப்பட்ட வழக்கால், கடந்த நான்கு மாதங்களாக இங்கிலாந்துக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 49 வயதான மருத்துவர் சங்கராம் பாட்டீல், இறுதியா... மேலும் பார்க்க