செய்திகள் :

`கள்ளக்குறிச்சி MLA ஆபாச தகவல் அனுப்பியது பணியிட துன்புறுத்தல் இல்லையா?' - நீதிபதி விக்டோரியா கௌரி

post image

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆட்சியர் தரப்பில் எந்த ஒரு பதிலும் சொல்லப்படாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி, இது பணியிட துன்புறுத்தல் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அலுவலர்களுக்கு பாலின உணர்திறன் மற்றும் உள்ளக புகார் குழு சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, ``கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஒருவர் ஆபாசமான தகவல் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை மாநில அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஒருவர் ஆபாசத் தகவல் அனுப்பிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி நீதிபதி பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவலம்!

கேரள மாநிலத்தின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்தான இடுக்கி மாவட்டம் இடமலக்குடி பஞ்சாயத்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி முற்றிலும் முடங்கியுள்ளது. ஒருபுறம் 6 மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளமில்லை; மற... மேலும் பார்க்க

கொளத்தூர்: வி.எஸ்.பாபு மறைவு... தொகுதியை `காலி'யாக அறிவித்த சட்டப்பேரவைச் செயலகம்!

தவெக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு (75) காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஓவைசிக்கு சல்யூட்; உ.பி போலீஸின் குளறுபடி! நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அளிக்கப்பட வேண்டிய காவல்துறை அணிவகுப்பு மரியாதையை, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி... மேலும் பார்க்க

காவிரி: "வாடும் சம்பா பயிர்கள்; ஏக்கருக்கு ரூ 40000 வழங்க வேண்டும்"- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

"டெல்டா மாவட்டங்களில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களின் துயரங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வல... மேலும் பார்க்க

செக்கானூரணி காவல் நிலைய மரணம்: "முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்?"- கனிமொழி

மதுரை வாலாந்தூரில் லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேனியைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), நவம்பர் 14-ம் தேதி அதிகாலை காவல் நி... மேலும் பார்க்க

'தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல’ – எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி பதிலடி!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி என என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இ... மேலும் பார்க்க