செய்திகள் :

காங்கிரஸ்: "அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய்.!"- மீண்டும் பிரவீன் சக்ரவர்த்தி

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் - திமுக

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஜன. 7) காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 வருஷமாக ஆட்சியில் இருந்தது இல்லை.

அதிக சீட், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. கூட்டணியை பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். அதில் பிரச்னை இல்லை. ஆனால் இறுதி முடிவை தலைமை தான் எடுக்கும். விஜய்யை சந்தித்தேன். அவ்வளவு தான். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய். அதனை யாரும் மறுக்க முடியாது" என்று பேசியிருக்கிறார்.

ஒருபக்கம் அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸில் நிர்வாகிகள் இருவேறு நிலைப்பாட்டில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும... மேலும் பார்க்க

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க