செய்திகள் :

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

post image

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியானப் பிறகு காங்கிரஸில் உள்ள பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

எம்.பி ஜோதிமணியும், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தனர்.

செல்வப்பெருந்தகை - கிரிஷ் சோடங்கர்
செல்வப்பெருந்தகை - கிரிஷ் சோடங்கர்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, "காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல், தொண்டர்கள் மத்தியிலும், கட்சியில் உள்ள தலைவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் யாருக்கு சீட் கொடுத்தார்கள், யாருக்கு கொடுக்கவில்லை என்பது பிரச்னை கிடையாது. பிரச்னை என்னவென்றால் 25, 30 சீட்டுகள் மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் இந்த மாதிரி பிரச்னைகள் வரத்தான் செய்யும்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுக்காலமாக இது போன்ற பிரச்னைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. இப்போது யாரெல்லாம் அதிருப்தி தெரிவிக்கிறார்களோ இதே கதை தான் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இதற்கு தீர்வு என்னவென்றால் சீட்டுகளை அதிகமாக்குவது தான். காங்கிரஸ் மிகப்பெரிய ஒரு பேரியக்கம். அதனால் காங்கிரஸிற்கு தேவையான சீட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசியலைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி காங்கிரஸிற்கும், பாஜகவுக்கு கொடுத்த அளவிலான சீட்டுகளைக் கொடுக்க முடியும்.

பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி

காமராஜர் ஆட்சியை தான் மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸின் மதிப்பு தமிழ்நாட்டில் அதிகம். காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை. ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்தாங்க.. இன்னொரு பக்கம் கல்யாண விருந்து வைத்தே கூப்பிட்டாங்க. ஆனால் தலைமையின் முடிவு இது.

பல காரணங்களுக்காக இதற்கு ஒப்புக்கொண்டோம். பாஜகவிற்கு எப்போதும் தமிழகத்தில் இடம் கொடுக்கவே கூடாது. அதற்கு தான் இந்தத் தேர்தல்" என்று பேசியிருக்கிறார்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க